திமுக ஆட்சி பொறுப்பேற்றிலிருந்து குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். மேலும் நில ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து தலைதூக்க ஆரம்பித்துள்ளது.கொலை சம்பவங்கள் சாதி பிரச்சனைகள் என குற்றசெயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
குற்ற செயல்களுக்கு ஆதரகவாக திமுகவினர் இருப்பது மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.இந்த நிலையில் திருநெல்வேலியில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட தி.மு.க. செயற்குழு உறுப்பினர் பேச்சி பாண்டியனை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தமிழக பா.ஜ. க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இது குறித்து அவரது அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பகுதியில் உள்ள தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரான பேச்சி பாண்டியன் எனும் நபர் மற்றொருவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து அதை எதிர்த்த நில உரிமையாளர்கள் தந்தை மகன் இருவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார். இவரது தாக்குதலில் காயமடைந்த தந்தை மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.
நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு மட்டும் அல்லாமல் நிலத்தின் உரிமையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பேச்சி பாண்டியன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி வருகிறது தி.மு.க. அவர் மீது மேலும் பல நில ஆக்கிரமிப்பு புகார்கள்இருப்பதாக தெரிகிறது. ஆனாலும் சட்டத்திற்கு பயப்படாமல் தொடர்ந்து சமூக விரோத செயல்களை செய்யும் தைரியம் இவருக்கு எங்கிருந்து வருகிறது?
உடனே காவல் துறை இந்த நபரை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். தி.மு.க. ஆட்சி என்றாலே நில ஆக்கிரமிப்பு என்பது இத்தனை ஆண்டுகால வரலாறாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.