திமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக தலைவர் திமுக நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் திமுகவினர் ஈடுப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டார். ஆனாலும் திமுகவினர் அடங்கவில்லை. மணல் கடத்தலுக்கு துணை போவது காவல்துறையை மிரட்டுவது போலி மருத்துவருக்கு ஆதரவாக பேசுவது என அராஜகங்கள் கூடி கொண்டே செல்கிறது. இதை முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு எடுத்து செல்ல மாவட்ட தலைவர்கள் மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட பெண் முன்களப்பணியாளரை ஆபாச வார்த்தையில் பேசி சாதி ரீதியாக திட்டிய திமுக நிர்வாகி சதிஷ்யை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோயம்பத்தூர் கணபதி அருகே உள்ள ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சௌமியா. இவர் கடந்த 17ஆம் தேதி வீடுகளில் கொரோனா கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இவரைப் பின்தொடர்ந்து வந்த ஆட்டோ ஓட்டுனர் சதீஷ் சாதி ரீதியாக இழிவாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து சதீஷ் அந்த பெண்ணை கெட்ட வார்த்தையில் பேசி தாக்கியுள்ளார். மேலும் நான் மாவட்ட திமுக தலைவராக உள்ளேன் என்றும் சொல்லி சிறை பிடித்துள்ளார்.
தொடர்ந்து சதீஷின் செயலை தட்டிக்கேட்ட சக முன்கள பணியாளர்களையும் இழிவாக பேசியுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் ஆட்டோ ஓட்டுனர் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான சதீஷ் திமுக நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். விடியல் ஆட்சி ரவுடிகளுக்காக! என்ற கேள்வியை தமிழக மக்கள் கேட்டு வருகிறார்கள்!