தற்போது தமிழகத்தில் கொரோனாவை தாண்டி அரசியல் சூடுபிடித்துவிட்டது. இதற்கு காரணம் வரும் 2021 தேர்தல் ஆகும். அனைத்து கட்சிகளுமே தேர்தலுக்கு தயாராவது கண்முன்னே தெரிகின்றது. திமுகவை பொறுத்தவரை தேசிய கல்வி கொள்கையை வைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு நடிகர் நடிகைகளை பயன்படுத்த தொடங்கியது. பாஜகவும் அதே யுக்தியை கையாண்டு வருகிறது தேசிய கல்வி கொள்கை, மத்திய அரசின் நலத்திட்டங்களை வைத்து தேர்தலை சந்திக்க தயாராகிவருகிறது. மேலும் திமுகவை நேரடியாக தாக்கி வருகிறது பா.ஜ.கவின் இளைஞரணி தலைவர் வினோஜ் மற்றும் அண்ணாமலை IPS அவர்கள்.
ஒருபுறம் நீட் தேர்வை எதிர்த்துவரும் திமுகவிற்கு பதிலடியாக தமிழகத்தில் பஸ் வசதி இல்லாத பகுதிகளை சேர்ந்த நீட் தேர்வு எழுதும் மாணவ – மாணவிகளுக்கு இலவச வாகன வசதி ஏற்படுத்தும் சேவையில் பாஜக இளைஞரணி இறங்கியது. இந்த சேவையில்1000 மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றார்கள். இது திமுகவிற்கு சோதனையாக அமைந்தது. களத்தில் வினோஜ் இறங்கி அடித்து வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை IPS திமுவினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் தயார் நேரடி விவாதத்திற்கு வர முடியுமா என சாவல் விடுத்தார். பின் எப்போதும் போல் நம் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் உதயநிதி ஆதரவாளர் எம்.பி. செந்தில் குமார் அவர்கள் நான் தயார் என சொன்னதோடு சரி அதன் பின் வாய் திறக்கவில்லை. அண்ணாமலை இரண்டு மூன்று முறை அவரை அழைத்து பார்த்தார். பதில்சொல்லவில்லை. இவ்வளவு தான் இவர்கள் வீரம். என அரசியல் வட்டரங்கள் பேச ஆரம்பித்துவிட்டது.
ஒரு காலத்தில் திமுக ஆட்சியை பிடித்தது என்றால் அது பேச்சுக்களால் மட்டுமே, ஆனால் தற்போதுவாரிசு அரசியலால் பதில் சொல்வதற்கும் பேசுவதற்கும் ஆள் இல்லாமல் நிற்கிறது.இந்த நிலையில் திருச்சி அரசியல் வாரிசு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது செய்தியாளர்கள் “பா.ஜ.க’வின் துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் உடன் விவாதம் நடத்த நீங்கள் தயாரா?” என கேட்டதற்கு “வேலியில் போகிற ஓணானை ஏன் வேட்டியில் எடுத்து விட வேண்டும்” என பதில் அளித்து பாஜகவுடன் விவாதம் நடத்தினால் அது எங்களுக்கு தான் ஆபத்து என உண்மையை ஒப்பு கொண்டுள்ளார். ஆம் அவர் சொன்னது 100% உண்மை . நேருக்கு நேர் விவாதம் நடத்தினால் திமுகவின் முகத்திரை கிழிந்து விடும் பொய்யான பரப்புரைகள் எல்லாம் மக்களுக்கு தெரிந்து விடும் அதற்காகத்தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓணானை வேட்டிக்குள் விட்டால் என்ன செய்யும் ஆளை காலி பண்ணிவிடும் இதன் காரணமாகத்தான் இப்படிப்பட்ட பதிலை கூறியுள்ளார். உதயநிதியின் அன்பு நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பாஜகவில் தற்போது உள்ள இளைஞர்களை சமாளிக்கவே ஆண்ட கட்சி என சொல்லும் திமுகவால் முடியவில்லை என்றால் எப்படி சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள போகிறோம் என முணுமுனுகின்றார்கள் உடன்பிறப்புகள் வாரிசு இளவரசர் உதயநிதியாவது அண்ணாமலையுடன் விவாதம் நடத்தி கட்சி பெயரை காப்பாரா என்று பார்க்கலாம்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















