தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கு நிலைகுலைந்தது. நடு ரோட்டில் கொலைகள்,சென்னையில் பெட்ரோல் குண்டு வீச்சு ரவுடிகளின் மாமூல் வேட்டை என 10 ஆண்டுகள் இல்லாத அசம்பாவிதங்கள் நடைபெற ஆரம்பித்ததுள்ளது. மேலும் திமுகவினர் பல இடங்களில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊசி பிரியாணி முதல் மசாஜ் சென்டர் வரை திமுகவின் அராஜகங்கள் மீண்டும் எழ தொடங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வேளச்சேரியில் உள்ள மசாஜ் சென்டரில் திமுக பிரமுகர் உட்பட 5 பேர் பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுத்தங்களுடன் மசாஜ் சென்டரில் வேலை பார்த்தவர்களை தாக்கி 5 சவரன் தங்க நகை, 30000 ரூபாய் பணம், 7 செல்போன்களை பறித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மேலும் இந்த வழக்கில் சி.சி.டி.வியில் கிடைத்த ஆதாரங்களை வைத்து காவல்துறையினர் இருவரை கைது செய்தனர். நேற்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் கிரியேட்டிவ் சலூன் அண்ட் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டரை தமிழரசன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டரில், கடந்த (26-10-2021) அன்று மதியம் சுமார் 12.50 மணியளவில் வெள்ளை உடை அணிந்த நபருடன் 5 பேர் கொண்ட கும்பல்பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தனர். மேலும் அங்கு பணியில் இருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஸ்பா ஊழியரான அன்புரோஸ் பெர்னாண்டஸ் என்பவர் தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஸ்பா ஊழியரின் தலையில் தாக்கிவிட்டு, அங்கிருந்த பெண்களின்பர்சில் இருந்த 30,000 ரூபாய் பணம், 7 செல்போன்கள், மற்றும் 5 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் இருவரும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
மேலும் இது குறித்து முன்பாக காவல்துறையில் புகார் செய்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.இந்த சம்பவம்குறித்து வேளச்சேரி ஆய்வாளர் சண்முகசுந்தரத்திடம் மசாஜ் சென்டர் உரிமையாளர் தமிழரசன் புகார் தெரிவித்தார். பின் காவல்துறையினர் மாஜாஜ் சென்டருக்கு விரைந்தனர்.
மஜாஜ் சென்டர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து ரவுடி கும்பல்களை தேடி வந்தார்கள். மணிகண்டன் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரை மட்டும் காவல் துறை நேற்று முன் தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திமுகவை சேர்ந்த 177வது வட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜன்(எ) மணி(26), மற்றும் பிரபாகரன்(எ) பன்னீர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவர் கைதாகியுள்ளனர். மஜாஜ் சென்டரில் தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















