விழுப்புரத்தில் திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க திமுக கொடி கம்பம் நடும் பணியில் ஈடுப்பட்ட 13 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலியான செய்தியை புதியதலைமுறை ஆரம்பித்து சன் டீவி வரை எந்த ஊடகமும் பேசாதது ஏன்?
விழுப்புரம் – மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது.இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவரை வரவேற்க திமுக சார்பில் தடபுடல் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
வழியெங்கும் கொடிகள் பேனர்கள் என திருவிழா போல் ஆனது விழுப்புரம் சாலை. விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் 10க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
இதில் விழுப்புரம் ரஹீம் லே- அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதே ஆன தினேஷ் என்ற சிறுவனும் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த சிறுவன் நடவு செய்த கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து சிறுவன் தினேஷ் தூக்கி வீசப்பட்டான்.
படுகாயம் அடைந்த சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தான்.
பள்ளிகள் திறக்கப்படாததால் கூலி வேலைக்கு சென்ற சிறுவனின் உயிரை திமுக கொடி கம்பம் பறித்துள்ளது. எனவே இதுபோன்ற வரவேற்புக்கு பேனர், கொடி கம்பங்கள் நட அனுமதி வழங்க கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் சுப ஸ்ரீ என்ற பெண் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பேனர் அவர் மீது விழுந்ததில் அருகே வேகமாக வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டு சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் தமிழகத்தினை உலுக்கியது
பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.தற்போது வாய்திறக்காமல் மௌனம் சாதிக்கிறார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்றார் இப்போது ஆளை காணவில்லை.
வினாடிக்கு வினாடி செய்திகள் போட்ட ஊடகங்களை காணவில்லை! இறப்பில் அரசியல் பிழைப்பை நடத்தி ஆட்சிக்கு வந்தவியுடன் தற்போது இறப்பை கண்டுகொள்ளாமல்இருப்பது தான் திராவிடன் ஸ்டாக் போல
யாரும் கைதும் செய்யப்படவில்லை.
சேனல்களில் செய்தியில்லை
வைகோ அழவில்லை
கம்யூனிஸ்ட்கள் கண்டனம் இல்லை
அழகிரிக்கு இன்னும் செய்தியே சேரவில்லை
விசிக வின் விசும்பல் துளியுமில்லை
பத்திரிக்கையாளர்கள் மதிமாறன், கரு.பழனியப்பன், ஆர்.கே வருத்தம் கூட தெரிவிக்கவில்லை
கோவன் பொங்கவில்லை
மே17 தி.மு.காந்தி பொங்கவில்லை
வேல்முருகன், வாயில் நுரை ததும்ப உரையாற்றவில்லை
எந்தச் சேனலிலும் பெயளவுக்குக் கூட விவாதமுமில்லை.
ஸ்டாலின் 10 லட்சத்தைத் தூக்கிக் கொண்டு இன்னும் ஓடவில்லை
கனிமொழி இன்னும் போராட்டம் செய்யவில்லை
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















