பெண்களையும், சைணவம் மற்றும் வைனவத்தையும் சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருக்கோவிலூர் பேருந்து நிறுத்தம் எதிரே பாஜக மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மேடையில் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவி திருக்கோவிலூர் என்றாலே சிவன், பெருமாள் அமைந்த இந்த ஊருக்கு சாபம் விட்டது போல் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி அமைந்துள்ளதாகவும்,திமுக பாரம்பரியத்தில் பெண்கள் கூட்டத்தில் இருக்கும்போதே ஆபாசமாக பேசுவது தான் வரலாறு அது பாஜகவில் இல்லை திராவிட முன்னேற்றக்கழகத்தில் சமுக நீதி, பெண்களுக்கான அரசு என்று கூறுவார்கள் ஆனால் பெண்களை இழிவாக பேசுவார்கள் என குற்றஞ்சாட்டினர்.
பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் நீக்க வேண்டும் என்றும் அமைச்சர் மனதில் எவ்வளவு வக்கிரமம் உள்ளது என்பதை காட்ட தான் திருக்கோவிலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும்,நாகரீக வரம்புகளுக்கு உட்படாமல் அமைச்சர் பொன்முடி பேசுவதாகவும், இரண்டு சமூகங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் படி பேசினால் சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் பொன்முடி மீது வழக்கு பதியவில்லை, நட்டின் குடிமகன் தவறு செய்தால் எப் ஐ ஆர் போடுவார்கள் அமைச்சர் பேசினால் தமிழக அரசு பாதுகாப்பார்கள் என தெரிவித்தார்.
வெறுப்பினை உண்டாக்கும் வகையில் பேசிய பொன்முடிக்கு வழக்கில் முகாந்திரம் இல்லை என வழக்கறிஞர் வாதாடுகிறார்.
சைணவத்தையும், வைனவத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய பொன்முடிக்கு உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கினை எடுத்து கொள்வதாக கூறியுள்ளது, தவறு செய்யும் அமைச்சரை கட்டிக்காக்கும் மாடல் அரசாக திமுக உள்ளதாகவும், ஜெயிலில் பெயில் கிடைச்சவுடன் செந்தில் பாலாஜியை அமைச்சராக்கி அழகு பார்க்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளதாக கூறினார்.
அமைச்சரவையில் உள்ள அமைச்சரவே கூறுகிறார் என்னிடம் அதிகாரம் இல்லை என பேரவையிலையே தெரிவிக்கிறார். தவறாக பேசும் அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்ப முதல்வர் நடவடிக்கை எடுத்தால் உடல் நலத்தோடு இருப்பார் என்றும் திராவிட மாடல் அரசில் ஊழல் செய்யும் அமைச்சர்கள், தவறாக பேசும் அமைச்சர்களை வைத்து கொண்டு இந்தியாவின் சிறந்த மாநில அரசாக திமுக அரசு செயல்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பாஜக ஆட்சி இருக்கும் வரை தீவிரவாதிகள் காஷ்மீரில் ஒரு இன்ச் இடத்தினை கூட எடுக்க முடியாது என்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக அன்னிய சக்திகளோடு பயங்கரவாத செயல் நடைபெற்றுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள திமுக அரசு தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் பூசி மொழிகி வேறொரு அர்த்தத்தை கொடுக்கும் என்றும் கோயம்புத்தூரில் இஸ்ஸாமிய பயங்கரவாதிகள் நடத்திய மிகப்பெரிய வெடி விபத்தினை சிலிண்டர் விபத்து என தெரிவித்தது ஸ்டாலின் அரசு என குற்றஞ்சாட்டினார். சிலிண்டர் விபத்து என தமிழக அரசு தெரிவித்ததற்கு என் ஐ ஏ இன்று அது வெடிவிபத்து என நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைத்திருக்கிறது. ஏற்கணவே கூட்டணியில் உள்ளவர்களை இணைத்து வருகின்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















