நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் குல தெய்வம் ஹெத்தையம்மன் ஆகும். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் கைகாரு சீமைக்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கு சொந்தமான ஹெத்தையம்மன் கோவில் ஆகும்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையதுறை படுகரின மக்களின் ஹெத்தையம்மன் கோவிலை கையகப்படுத்தும் முடிவுக்கு வந்தது, அதுமட்டுமில்லாமல் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கோயில்களை அரசு கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இந்த கோவில்களில் வருமானம் உண்டியல் பணம் அதிகரித்து வருகிறது. மேலும் இக்கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் உள்ளது. இதனை தொடர்நது இந்து சமய அறநிலையத்துறை ஹெத்தையம்மன் கோவிலையம் அதன் நிலத்தையும் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த முடிவிற்கு படுகர் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனால் திமுக அரசு நிலத்தை கையகப்படுத்தும் முடிவில் இருந்து பின் வாங்குவதாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து இதை கண்டிக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இந்து முன்னணி களத்தில் இறங்கியது. மேலும் இந்துமுன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் படுகர் இன மக்களுடன் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் இந்த போராட்டத்தில் முக்கிய கோரிக்கைகள் வைக்கபட்டத்து. போராட்டத்தில் கோயில்கள் அரசின் பிடியில் வந்த பின் கடந்த 60 ஆண்டுகளில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை காணவில்லை, ஆயிரக்கணக்கான கோயில்களில் 7000 சிலைகளை காணவில்லை, 1700 சிலைகள் போலியானவை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிலை காக்க போராட்டம் நடத்தினர்.