திருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் சாதாரண மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ருச்சி மாவட்டம், நவல்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் சாதாரண மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. திருச்சி மாவட்டம், நவல்பட்டு சோழமாநகர் பகுதியில் வசித்து வந்தவர் பூமிநாதன். இவருக்கு கவிதா என்ற மனைவியும், குகன் என்ற மகனும் உள்ளனர். இதனிடையே பூமிநாதன் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
ந்நிலையில், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பூமிநாதன் நேற்று இரவு நவல்பட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் மூன்று பேர் கொண்ட கும்பல் இரண்டு சக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்துள்ளனர். அவர்களை பூமிநாதன் தடுத்துள்ளார். ஆனால் அந்த கும்பல் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த மர்ம கும்பலை பூமிநாதன் துரத்தி சென்று பிடித்துள்ளார். அப்போது மற்ற கும்பல் பூமிநாதனை சராமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது. பாதுகாப்பு கொடுக்கும் போலீசாருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலைதான் உருவாகியுள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை
திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது! கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் நம்முடைய காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள்.பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது.
மாநில அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும் ! அன்னாரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.எனதனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















