தி.மு.கவை பொறுத்தவரை எப்போதும் குடும்ப அரசியல் தான் என்பது அனைவருக்கும் தெரிந்தத ஒன்று. கருணாநிதி,அதன் பின் ஸ்டாலின் அதன் பின் உதயநிதி என்று வாரிசு தலைவர்கள் உருவாகி கொண்டே தான் இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு போட்டியாக யாரும் வளரவிட கூடாது என்பதில் கருணாநிதி தீர்க்கமாக இருந்தார். அதனால் தான் கனிமொழி,அழகிரி போன்றோரை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்,
ஸ்டாலினுக்கு அடுத்து தி.மு.க-வின் தலைமை இடத்திற்கு கனிமொழி வருவார் என நினைத்த அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் ஸ்டாலின், ஆம் இளைஞரணி செயலாளராக உதயநிதியை அறிவித்தார். அவருக்கு சேப்பாக்கம் தொகுதியை வழங்கி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார், அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் உதயநிதிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
அமைச்சர்கள் அனைவரும் உதயநிதியை பார்த்த பிறகுதான் ஸ்டாலினை பார்க்க வேண்டும் என்ற மறைமுக உத்தரவு திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி தான் என அனைவரையும் பேச வைத்து விட்டார் ஸ்டாலின், இதற்கு உதவியாக இருப்பவர் சபரீசன் ஸ்டாலின் மருமகன். ஸ்டாலின் குடும்பம் மட்டுமே தி.மு.க என்ற நிலையினை உருவாக்கி வருகிறார்கள். இது அனைத்து திமுகவினருக்கும் அதிரிச்சியளித்துள்ளது.
உதயநிதி-யின் வருகையை பொறுத்துக் கொள்ள முடியாத கனிமொழி சவுக்கு சங்கர் போன்றவர்கள் மூலமாக கட்சிக்கு எதிராகவும், உதயநிதிக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்குமாறு சவுக்கு சங்கர் போன்ற சில்லறை போராளிகளை தூண்டி விடுவதாக பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சவுக்கு சங்கர் தெரிவித்து இருக்கும் பகீர் குற்றச்சாட்டு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















