திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் மீண்டும் நில அபகரிப்பு தொடங்கியுள்ளது. யாரவது நிலம் வாங்கி போட்டு வெளி நாடுகளுக்கு சென்றால் அந்த நிலத்தினை வளைத்து போடுவதில் கில்லாடிகள். இந்த நிலையில் திருச்சி அருகே, 20 கோடி ரூபாய் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்படும் தி.மு.க., பிரமுகருக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் துணை போகின்றார்கள்.
திருச்சி,மாவட்டம் அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் மல்லிகா படேல். இவர், எட்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த நடராஜன் – ஹேமலதா தம்பதி உட்பட பலரிடம், 14 ஏக்கர் நிலம் வாங்கினார். இந்த நிலம் தொடர்பாக, இரு தரப்புக்கும் பிரச்னை உள்ளது. இது பிரச்சனையில் பஞ்சாயத்திற்கு திமுக மாவட்ட பிரதிநிதி மாரியப்பனிடம் நடராஜன் – ஹேமலதா கடந்த ஆட்சியில் அமைதியாக இருந்த இந்த பிரச்சனை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைகீழாக மாறியுள்ளது. தாசில்தார் உள்ளிட்ட அனைவரும் திமுக மாவட்ட பிரதிநிதியின் பேச்சை கேட்க ஆரம்பித்தார்கள்.
நிலத்தின் தற்போதைய மதிப்பு, 20 கோடி ரூபாய். மல்லிகா, தன் நிலத்தை 15 பேருக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால், தற்போது, நடராஜன் – ஹேமலதா தம்பதிக்கு பட்டா வழங்க, வருவாய் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த மல்லிகா தரப்பினர், நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., பழனிகுமாரிடம் புகார் அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:நிலம் விற்பனை செய்த பின், பணம் பறிக்கும் நோக்கத்தில் நடராஜன் – ஹேமலதா தம்பதி, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் துணையுடன், நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி, புகார் அளித்துள்ளனர். அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை.
மேலும் நிலம் தொடர்பாக, இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலத்துக்கு சம்பந்தம் இல்லாத தி.மு.க., பிரமுகர் மாரியப்பனிடம் விசாரணை நடத்தி, திருச்சி ஆர்.டி.ஓ.,வும், திருவெறும்பூர் தாசில்தாரும் ஒரு தலைபட்சமாக நடந்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை அபகரிக்க பொய் புகார் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.