திருமழிசை பேரூராட்சியில், திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருவது, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது திருமழிசை பேரூராட்சி. இங்குள்ள ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் திருமழிசை ஆழ்வாருக்கு சன்னதி உள்ளது திருமழிசையாழ்வார் பிறந்த இடம். இக்கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் உள்ளது. தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் இடத்தை ஆக்கிரமிக்க திமுகவினர் திட்டமிட்டு வருகிறார்கள்.
ஜெகந்நாதப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தினை சிலர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதில், எவ்வித கட்டடம் கட்ட அனுமதி கிடையாது.இந்நிலையில், திருமழிசையாழ்வார் பிறந்த இடத்தை, குத்தகைக்கு எடுத்த தி.மு.க., பிரமுகர் ஒருவர், சாலையோரமாக வணிக வளாகம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடவுள் இல்லை என்று கூறும் திமுகவினர் கோவில்நிலங்களை ஆக்கிரமிப்பத்தில் முதலாவதாக இருக்கிறார்கள். மேலும் இதே போல்கிருஸ்துவ தேவாலயங்கள் அல்லது வக்பு வாரிய நிலத்தை ஆக்கிரமிக்க திமுகவினருக்கு திராணி உள்ளதா என்ற கேள்விகளை பொது மக்கள் எழுப்புகின்றார்கள்.