அரசியலிலிருந்து விலகலா கனிமொழி….அதிரும் அறிவாலயம்… விஜய் பக்கம் வீசிய காற்று..

kanimozhi Dmk

kanimozhi Dmk

உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றபின்கோபாலபுரத்தில் இன்சைட் மீட்டிங் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் கனிமொழி குறித்து தான் அதிகநேரம் விவாதிக்கப்பட்டதாம்.

கருணாநிதியின் மகளான கனிமொழி எம்.பி. திமுகவின் துணை பொதுச்செயலாளராக உள்ளார். மேலும் கட்சிக்குள்ளேநல்ல பெயரை வைத்திருப்பவர். திமுகவில் அனைவராலும் அறியப்பட்ட முக்கிய பெண் அரசியல்வாதி என்றால் அது கனிமொழி மட்டுமே. அதுவும் கருணாதியின் மகள் என்பதால்தான் இது தான் திமுகவின் சமூகநீதி.

கனிமொழி ஓரம்கட்ட போடப்பட்ட பிளான் கனிமொழி கட்சியினரிடையே நற்பெயர் சம்பாதிப்பது குறித்து கட்சிக்குள் இருக்கும் பலரும் பலவாறாக சிந்திக்கலாம்; பேசலாம். ஆனால், கோபாலபுரம் குடும்பத்துக்குள்ளேயே சிலருக்கு குமைச்சல் வந்தது . கனிமொழிக்கு ஜனவரி 5-ம் தேதி பிறந்த நாள். இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஸ்டாலின் துர்கா, உதயநிதி ஸ்டாலின் என கருணாநிதி குடும்பத்துச் சொந்தங்கள் கனிமொழிக்கு கனிவோடு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னார்கள் புன்சிரித்து ஆசிபெற்றார்கள். ஆனால் இந்த ஆண்டு, அண்ணன் ஸ்டாலின் மட்டுமே தங்கைக்கு சால்வை அணிவித்து வாழ்த்துச் சொன்னார். உடன் அண்ணியார் துர்கா இல்லை; கட்சியின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதியும் இந்த முறை அத்தைக்கு வாழ்த்துச் சொல்லி ஆசிபெறவில்லை.அப்போதே கனிமொழிக்கு ஸ்கெட்ச் போட்டுவிட்டார் அண்ணியார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர், மகளிர் அணிக்குப் பொறுப்பாளர், எம்பி – என இத்தனை பொறுப்புகள் இருந்தும் கனிமொழிக்கு உதயநிதி பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லாதது திமுகவுக்குள்ளேயே பெரும் விவாதமாகப் சென்றது கனிமொழிக்கு உதயநிதி பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல மறந்த நிலையில், நடிகர் விஜய் இம்முறை கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி இருப்பது அரசியல் பார்வையாளர்கள் பலரையும் புருவம் உயர்த்தவைத்தது .

“எப்போதும்போல் விஜய் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னார்; அவ்வளவுதான். மற்றபடி நாங்கள் வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. குறிப்பாக, அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை” என்று நாகரிகம் காத்தார் கனிமொழி. அவர் இப்படிச் சொன்னாலும் இந்த நேரத்தில் விஜய் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னது அரசியல் ரீதியாக கனிமொழிக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.

அமைச்சரும் சக நடிகருமான உதயநிதிக்கு நவம்பர் 27-ம் தேதி பிறந்தநாள். இப்போது கனிமொழிக்கு வாழ்த்துச் சொன்ன விஜய், உதயநிதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லாமல் போனதும் இப்போது உற்று நோக்கப்படுகிறது. இதுதான் உதயநிதி விசுவாச வட்டத்தை கோபப்பட வைத்துள்ளது என்கிறார்கள்.

திமுக மகளிரணி நடத்திய ‘மகளிர் உரிமை மாநாட்டு’க்கு சோனியா, பிரியங்கா, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே, டிம்பிள் யாதவ் உள்ளிட்ட தேசத்தின் முக்கிய பெண் ஆளுமைகளை சென்னைக்கு அழைத்து வந்து தனது தனிப்பட்ட செல்வாக்கைக் காட்டினார் கனிமொழி. அதேபோல் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு ராகுல் காந்தியை அழைத்துவர நினைத்தார் உதயநிதி. ஆனால், அது முடியாமல் போய்விட்டது.

தேசிய அரசியலில் உதயநிதியால் முடியாததை எல்லாம் கனிமொழியால் சாதிக்க முடிவதும் உதயநிதியால் முடியாததும் ஸ்டாலினுக்கும் அண்ணியாருக்கும் சங்கடத்தைஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து தான் கனிமொழியை ஓரம்கட்ட முடிவெடுத்துள்ளார்கள்.இந்த நிலையில் தான் துணை முதல்வராக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இது கட்சிக்குள் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது
அதுமட்டுமில்லாமல் ராகுல் காந்தி இதுவரை வாழ்த்து சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென் மண்டலத்தை குறிவைத்து கனிமொழி அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் இது உதயநிதிக்கு பிடிக்கவில்லையாம் இது குறித்து தனது அம்மாவிடம் கூறியுள்ளார் சின்னவர். உடனே அண்ணியார் முதல்வரிடம் பேசியுள்ளார்.கனிமொழியை அரசியலில் இருந்து முழுவதுமாக ஓரம் கட்டுவதற்கு செய்ய வேண்டிய வேலை செய்யுங்கள் இல்லை என்றால் தலைவலியாக அமைந்து விடும் எனக்கு கூறியுள்ளார் அண்ணியார்.

இதையறிந்த கனிமொழி மிகவும் கவலையில் உள்ளார் இனி அரசியல் இருக்கலாமா இல்லை அண்ணன் அழகிரி போல் கட்சியை விட்டு விலகி விடலாமா என்று யோசிக்க தொடங்கி விட்டாராம். இது குறித்து அழகிரியிடம் பேசியுள்ளார். அழகிரியோ அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். 2026 தேர்தல்வரட்டும் என கூறியுள்ளார். தென் மண்டலத்தை சேர்ந்த பல அமைச்சர்கள் என்னிடம் பேசிவருகிறார்கள் தென் மண்டலத்தில் நான் உங்களை பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் அரசியலில் இருந்து விலக வேண்டாம் மீண்டும் எழுவோம் மீண்டும் கட்சியை கைப்பற்றுவோம் என ஆறுதல் கொடுத்துள்ளாராம்.

Exit mobile version