கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கொடியை ஏற்றாமல் புறக்கணித்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.
ஆனால் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கின்ற போது அதற்கு வணக்கம் தெரிவிக்காமல், தேசிய கொடியை அவமதித்து விட்டு சென்றார் அவர். தேசியக் கொடியை அவமதித்த இதுதொடர்பாக எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை மு.க.ஸ்டாலின். அதாவது திட்டமிட்டு தான் தேசிய கொடியை அவர் அவதரித்தார் என்பது வெட்ட வெளிச்சமானது.
பல ஆண்டுகளாக தேசியக்கொடியை ஏற்றாமல் தேசத் துரோகியாக இருந்து வந்த மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு சுதந்திரதின விழாவின்போது, தேசியக் கொடியை ஏற்றி அதற்கு வணக்கம் தெரிவிக்காமல் அவமதித்து சென்றார்.
திமுக தலைவர் எவ்வழியோ, அவ்வழியே அந்த கட்சியின் தொண்டர்களும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கட்டிமாங்கோடு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஜுபிட்டர் உதயம். இவர் திமுகவை சேர்ந்தவர். இவர் நேற்று (26.01.2021) நடந்த குடியரசுதின விழாவின் போது, கட்டிமாங்கோடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்.
அப்போது தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றி அவமதித்துள்ளார்.
இதனை நேரில் பார்த்த சிலர், தேசியக்கொடி அவமதிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டியும், திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஜுபிட்டர் உதயம் அதனை பொருட்படுத்தவில்லை. இதனைப் பார்த்த பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திமுக ஒரு தேச துரோக கட்சி என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறது.