ஹிந்து கடவுள் எதிர்ப்பு இயக்கமா திகவில் இருந்த பிரிந்த திமுகவின் தற்போதைய தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் , நேற்று சுவாமி தரிசனம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம், மணவாளநல்லுாரில், சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், பிராது கட்டி வேண்டினால், மூன்று நாளில் துவங்கி மூன்று மாதங்களில், நிறைவேறும் என்பது ஐதீகம்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்காஸ்டாலின் , நேற்று காலை, கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்தார்.
அவர், சுவாமி முன் அமர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களையும் ராசி, நட்சத்திரத்துடன் குறிப்பிட்டு, அர்ச்சனை செய்தார். பின், அலுவலகத்திற்கு சென்று, மூன்று மாதங்களுக்கு உரிய பிராது கட்டணம் செலுத்தி, பிராது சீட்டு பெற்றார்.
இதையடுத்து, கொளஞ்சியப்பர் சுவாமியிடம் ஆசி பெற்று, முனியப்பர் சன்னிதியில் எலுமிச்சை பழம் சொருகி, சீட்டு கட்டினார்.பின்பு புறப்பட்டு, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்றார்.
துர்கா ஸ்டாலின் வருகையின்போது, தி.மு.க.,வினர் யாரும் வர வேண்டாம் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரவில்லை.
நன்றி :- படம் தினமலர்