15 வயது மாணவி இடம் தவறாக நடந்த திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த திமுக மாணவரணி நிர்வாகி சங்கர். காரைக்குடியில் பெண்கள் ஹாக்கி கிளப் நடத்தி வருகிறார். தனியார் பள்ளியில் பயின்று வரும் (15) வயது மாணவி மற்றும் அவரது சகோதரி (14) இருவரும் பயிற்சி பெற்று வந்தனர். இவ்விருவருக்கும் அண்மையில் சங்கர் பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.
இதனை அடுத்து சிறுமிகள் பள்ளி முதல்வரிடம். கண்ணீர் மல்க தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை தெரிவித்தனர். சிறுமிகளின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில். காரைக்குடி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தேவகி போக்ஸோ சட்டத்தில் சங்கரையும் அவருக்கு உடந்தையாக இருந்த கண்ணனையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது