தஞ்சாவூரில் திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா திமுக பிரமுகர் ராமநாதனுக்கு 100 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் கொடுக்கப்பட்டது. சுதர்சன சபா வளாகத்தில் மதுக்கூடம், ஹோட்டல், செல்போன் கடைகள் வைப்பதற்கு திமுக பிரமுகர் உள்வாடகை விட்டதாக தெரிகிறது. அதே நேரத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையையும் அவர் செலுத்தவில்லை.
இதனால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரத்து 793 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது. இது குறித்து தண்டோரா வாயிலாக அறிவித்ததுடன், மாநகராட்சி இடத்தில் நோட்டீசும் ஒட்டப்பட்டது. மாநகராட்சி கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















