கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட் இவர் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், இவரது சொந்த ஊரான சுத்தமலை கிராமத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தன்னுடைய தம்பி மனைவி ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிர் நடவு செய்து பராமரித்து வந்த நிலையில் இவர்களுடைய நிலத்தை அபகரிக்க முயன்று அவர்களின் விளைநிலத்தில் பயிரிட்டிருந்த ஐந்து ஏக்கர் கரும்பு பயிர்களை அடியாட்களுடன் மிரட்டி சட்டவிரோதமாக தனது திமுக கவுன்சிலர் தனது பெயரில் மூங்கில்துறைப்பட்டு கரும்பு ஆலையை அனுப்பி சுமார் ஐந்து லட்சம் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து கேட்ட பெண்களை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த நிலையில் இதுகுறித்து மூங்கில் துறைபட்டு காவல் நிலையத்தில் பாதிக்கபட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.இந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் இயேசு ரட்சகர் மீது என்பவர் மீது 5 வழக்கு மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்தில் பதிவு செய்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்யாத காவல்துறை அலட்சியமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் கவுன்சிலுடன் தனக்குள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இவர்கள் நிலத்தை மிரட்டி வாங்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. வீடு புகுந்து வீட்டில் இருந்த ஆன்ரூ வின்செண்ட் மனைவி ,இரண்டு மகள்கள் ,மற்றும் தம்பி மனைவி ஆகியோரை அடித்து ஆடைகளை கிழித்து மானபங்கம் படுத்தி ,கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நில அபகரிப்பு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்யும் திமுக கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















