சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றவவர் PK சேகர் பாபு . தற்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக வேட்பாளர் வினோஜ் அவர்களைசேகர் பாபுவின் ஆட்கள் தாக்க முற்சித்தார்கள். ஆளுங்கட்சியாக இல்லாத போதே சேகர் பாபுவின் ஆதரவாளர்கள் அடாவடி செய்து வந்தார்கள். தற்போது அளவும் கட்சி வேற அமைச்சரும் ஆகிவிட்டார். அப்பறம் சொல்ல தேவையில்லை. மேலும் அமைச்சரான பிறகு ஜெயின் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாபு நேரடியாக ஜெயின் சமூகத்தை மிரட்டினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் சேகர் பாபுவின் உடன் பிறந்த சகோதரர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை கெங்குரெட்டி சாலையில் மதுபான கூடம் நடத்திவருவதாக சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாக நீண்ட நேரம் மதுபான கூடத்தை திறந்து வைத்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து காவல் துறை அங்கு சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது,
இதையடுத்து கீழ்பாக்கம் காவல் துணை ஆணையரை அமைச்சர் சேகர்பாபுவின் உதவியாளர் என கூறிக்கொள்ளும் ஒருவர் அலைபேசியில் தரக்குறைவாக பேசி மிரட்டும் ஆடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சம்பந்தப்பட்ட அமைச்சர் இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து மேல்நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















