சமூக வலைத்தளங்களில் திமுக அமைச்சர் நாசர் பத்திரிகையாளர்களை யோவ் ஒழுங்கா கீழே உட்காரு என கூறி மிரட்டும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது,
உவமைக் கவிஞர்’ என அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அசோக் பில்லர், மாநகராட்சி பூங்கா அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாளை (23.11.2021) நேற்றைய தினம் காலை 9.30 மணியளவில், தமிழக அரசின் சார்பில், திமுகஅமைச்சர் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, வேலு, பிரபாகரராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி இறுதியில் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளிக்க தயாரானார், அப்போது செய்தியாளர்கள் தங்களின் மைக்குகளை மா.சுப்ரமணியனிடம் நீட்டினார்கள்.மைக்கை நீட்டும் இடத்தில பல்வளத்துறை அமைச்சர் நாசர் நின்றுள்ளார். தெரியாமல் மைக் அவர் மேல பட்டுவிட கோவத்தின் உச்சிக்கு சென்றார்.
கோவம் அடைந்த அமைச்சர் நாசர் கீழே உட்காருங்களே.., யோவ் கீழே உட்காரு..சொல்றோம்ல உக்காரு.. மைக்கு வெளில போயிரு என கையை நீட்டி செய்தியாளர்களை மிரட்டினார். இந்த காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிரட்டும் தொனியில் அமைச்சர் செய்தியாளர்களை ஒருமையில் பேசிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பினை கிளம்பினாலும் செய்தியாளர்கள் அமைதியின் மறுஉருவமாய் இருக்கிறார்கள்.
இதுவே பாஜக தரப்பில் யாரவது பேசியிருந்தால் புகார் அளிக்கப்படும் மன்னிப்புக்கேட்க ஆர்ப்பாட்டம் அவர்களின் பேட்டிக்கு யாரும் செல்லமாட்டோம் என வரிந்து கட்டி இருப்பார்கள் நம்செய்தியாளர்கள், ரெட்லைட் மீடியா என ஆர்.பாரதி கூறியதற்கே அமைதி காத்தவர்கள் தமிழகஊடகங்கள். இதெல்லாம் அவர்களுக்கு ஜுஜுபி.. மேலும் திமுகவினர் செய்தியாளர்களை திட்டினால் இயேசுநாதர் போல் ஒரு கன்னதில் அறைந்தால் மறு கன்னத்தினை காட்டு என்பதை போல் அவதரித்துவிடுவார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















