கோவில்களில் இருந்து வருமானத்தை மட்டும் எடுத்துக் கொள்வதிலேயே குறியாக உள்ள இந்து சமய அறநிலையத்துறை அதன் நிலங்களை அளவீடு செய்வதற்கோ மீட்பதற்கோ முறையான நடவடிக்கைகள் எடுக்க முன் வராதது ஏன்?
கோவில்களின் நிலங்கள் சம்பந்தமான விபரங்கள் அனைத்தும் இனி இணையதளங்களில் ஏற்றப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது. அதனால் இதுவரை எந்த கோவிலுக்கான விபரங்கள் ஏற்றப்பட்டுள்ளன, அதற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் என்னவாயிற்று என்ற விபரத்தை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட வேண்டும்.
மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இந்துக்களுக்கு சொந்தமான இடத்தை வக்ஃப் வாரியம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பல இடங்களில் புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அளவீடு செய்யும் பணி நடைபெறுவதால் அந்த இடங்களையும் கணக்கில் சேர்த்துக் கொள்வார்களா.? என்ற அச்சம் பாதிக்கப்பட்ட இந்து மக்களிடம் எழுந்துள்ளது. தமிழக அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது…