தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடக காங்கிரஸ் அரசு! பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்! அமைச்சர் பதிலடி!
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் மீதும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது காவேரி மற்றும் மேகதாது அணை பிரச்சனை.
“கர்நாடகத்தின் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் புதிய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை எப்பாடுபட்டாவது தீருவோம், அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான, காங்கிரஸ் ஆட்சி,கடந்த இரண்டு மாதங்களாக, தமிழகத்திற்கு காவிரியில் தர வேண்டிய நீரை வழங்கவில்லை
இது தொடர்பாக காவிரி பிரச்னை தொடர்பாக, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார், கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் போது காவிரி நீர் சிறு சிறு பிரச்சனைகள் மட்டுமே எழுந்தாலும் முறையாக வந்து கொண்டிருந்தது தற்போது திமுக கூட்டணி கட்சியினா காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை இரண்டு மாதகாலமாக நிறுத்தி வைத்துள்ளது காங்கிரஸ் அரசு. .
இது தொடர்பாக, நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு கடந்த இரண்டு மாதங்களில் தர வேண்டிய தண்ணீரை, காவிரியில் திறந்து விட, கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என, கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். கூட்டணி கட்சியான காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள நிலையில், அம்மாநில முதல்வருடன் பேசி, பிரச்னைக்கு தீர்வு காணாமல், முதல்வர் பிரதமருக்கு, கடிதம் எழுதி இருப்பது, கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
இவ்விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய திறன் மேம்பாடு, மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தன் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
இரண்டு வாரிசு கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தி.மு.க.பிரதமர் நரேந்திரமோடி வெறுப்பு காரணமாக, இந்தியா மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒன்றிணைந்துஉள்ளன. தங்கள் வாரிசுகளை காப்பதற்காகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர். கூட்டணியில் இருக்கும் இரண்டு வாரிசு கட்சிகளும், தங்கள் பிரச்னையை தீர்க்க முடியாததால், தகராறை தீர்க்க உதவக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்த ஜோக்கர்களால், தங்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாத நிலையில், மக்கள் பிரச்னைகளை எப்படி தீர்க்க முடியும்?
என கேள்வி எழுப்பியுள்ளார்!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















