திமுக எம்.எல்.ஏ மிரட்டியதால் அப்பாவி முதியவர் தீக்குளிப்பு.

தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்று நான்குமாதம் கூட அகதநிலையைல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அதே பகுதியில் நந்தன் என்ற முதியவர் வசித்து வந்தார். அவருக்கு சொந்தமாக 3 சென்ட் நிலம் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நிலத்தை ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அவர்கள் முதியவரிடம் நிலத்தை கேட்டுள்ளார். அதற்கு முதியவர் நிலத்தை தர மறுத்ததால் தொடர்ந்து அவரை திமுக எம்.எல்.ஏ மிரட்டியுள்ளார்.

இதை தொடர்ந்து முதியவர் காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த முதியவர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன்னை மண் என்னை ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட முதியவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் தான் என்று கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதக்குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் வாய்திறந்து பேசுவாரா என தற்பொழுது கேள்வி எழுந்துள்ளது.

தகவல்:- மீடியான்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version