பா.ஜ.க தமிழக இளைஞரணி செயற் குழு உறுப்பினரும், மதுரை கோட்ட இளைஞரணி பொறுப்பாளுருமான சங்கரபாண்டி மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ மூர்த்தியின். ஊழல்கள் மற்றும் அராஜக போக்கை தொடர்ந்து மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். இவரின் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. செய்தியாகவும் வெளியாகின.இதை அறிந்த மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ மூர்த்தி, தன் ரவுடி பட்டாளத்துடன் பா.ஜ.க தமிழக இளைஞரணி நிர்வாகி வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
பாஜக நிர்வாகி சங்கரபாண்டியின் மனைவியை செருப்பால் அடிக்க முயற்சி செய்துள்ளார். அங்கு நடந்த சம்பவம் அனைத்தும் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. அராஜக போக்கில் நடந்து கொண்ட தி.மு.க எம்.எல்.ஏ மூர்த்தியிடம் சங்கரபாண்டி சட்டப்படி சந்திக்கலாம் என பேசியுள்ளார். அதற்கு கோபம் கொண்ட, தி.மு.க எம்.எல்.ஏ தகாத வார்த்தைகளில் சங்கரபாண்டியையும் அவர் மனைவியையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இது குறித்து பா.ஜ.க இளைஞரணி தலைவர் “மதுரை கிழக்கு திமுக எம்எல்ஏ மூர்த்தியின் ஊழல்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய பாஜக இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டியன் அவர்களின் வீட்டிற்கு சென்ற திமுக எம்எல்ஏ மூர்த்தி தன் செருப்பை கழட்டி அவரது மனைவியை அடிக்க சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திமுக எம்எல்ஏ வின் இந்த அரஜாகப்போக்கிற்கு உடனடி நடவடிக்கை எடுக்க மதுரை காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக மாநில இளைஞரணி சார்பாக கேட்டுக் கொள்கிறேன் !” என தனது சுட்டுரையில் பதிவிட்டிருந்தார் . மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. . இந்த சம்பத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















