தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு குறித்த பிரச்சனை தலைவிரித்து ஆடிவருகிறது. எங்கு பார்த்தாலும் கொலை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. என்ற குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. போதையால் சீரழியும் இளைஞர்கள் என திமுக ஆட்சியில் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள் மக்கள். ஆனால் இதெயெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு அப்பா என அழைக்கிறார்கள் என தற்பெருமை பேசி வருகிறார். ஆனால் அவரின் நிர்வாகியோ பொதுவெளியில் ஒரு பெண் நிர்வாகியின் வளையலை கழட்டுகிறார்.
திமுக நிர்வாகிகள் தினமும் ஏதாவது பிரச்சனையில் மாட்டிகொளவ்தும் வழக்கமாகி விட்டது. குறிப்பாக போதை பொருள் கடத்தல் சம்பவங்களில் திமுகவை செத்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.. 2000 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தலில் திமுக அயலக அணியின் தலைவராக இருந்த ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலை சம்பவம் தொடர்பாக திமுக அனுதாபி ஞானசேகரன் பிடிபட்டான். அதனை தொடர்ந்து 70 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருள் கடத்தப்பட்ட சம்பவத்தில் திமுக நிர்வாகி செய்யது இப்ராகிம் கைது செய்யப்பட்டார். இதனால் திமுக அரசின் மீது மக்கள் கொதிப்படைய ஆரம்பித்துவிட்டார்கள். இந்தநிலையில் திமுக மீதான அவபெயரை மறைக்க மொழி பிரச்சனையை கையில் எடுத்துள்ளது திமுக.
மத்திய அரசு அமல்படுத்தி இருக்கும் மும்மொழி கொள்கையை, தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து வருகிறது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் – பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. மேலேயும் இந்த விவகாரம் மக்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது. அனைவருக்கும் ஒரே கல்வி கொடுத்தால் என்ன தப்பு என மக்கள் கேள்விகள்
கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் உறுதிமொழி எடுத்து வருகின்றனர். அதேபோல், நீலகிரி மாவட்டம் குன்னூரிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது. அண்ணா சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி தலைவி சுசீலா, கவுன்சிலரும், அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி தலைவர் மற்றும் தலைமை பேச்சாளருமான ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உறுதிமொழி வாசித்துக் கொண்டு இருந்த போது, நகராட்சி தலைவர் சுசீலா கையில் இருந்த வளையலை, ஜாகிர் உசேன் உருவ முயன்றார். இதனை பார்த்த அருகில் இருந்த மற்றொரு நிர்வாகி, அவரின் கையை தட்டிவிட்டார்.
ஓரிரு வினாடிகளில், சுசிலா கை மீது மீண்டும் தனது கையை வைத்த ஜாகிர் உசேன் வளையலை கழற்ற முயன்றார். உடனடியாக சுசீலா தனது கையை கீழே இறக்கினார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். உடனடியாக அந்த வீடியோ வைரலானது.
இதனை பார்த்து தி.மு.க.,வை விமர்சித்து வருகின்றனர் இந்த வீடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் தனது ‘எக்ஸ் ‘ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதுடன், ” ஹிந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் திரு ஜாகிர் உசேன். திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது!” என விமர்சித்து உள்ளார்.