தி.மு.க அரசு பதவி ஏற்றதிலிருந்து கொலை சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. காவல்துறை துணை ஆய்வாளர் கொலை, அரசாங்க ஊழியர்களை தாக்குதல், மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் கையை வெட்டுதல் போன்ற அராஜகங்கள் என தினம் தோறும் அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பொதுமக்களே கூறிவரும் நிலையில் தி.மு.க ஒன்றிய செயலாளர் ரியல் எஸ்டேட் அதிபரை கொடுமையான முறையில் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை மல்லியம்பத்து செங்கற்சோலையை சார்ந்தவர் சிவக்குமார் என்ற சோலை சிவா இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார், இவரும் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேசுவரன் சேர்ந்து தொழில் செய்து வந்தார்கள் என கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டிற்கு சென்ற சிவக்குமார் தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.
அந்த சமயத்தில் திடீரென சிவக்குமாரின் வீட்டுக்குள்புகுந்த 2 நபர்கள்.ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கியுள்ளார்கள். கண் இமைக்கும் வேளையில் தாங்கள் தயாராக கொண்டு சென்ற சவுக்கு கட்டைகளால் சிவக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார்., நிலை குலைந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டையொட்டி உள்ள இடத்தை பட்டா போடுவது தொடர்பாகவும், அப்பகுதியில் உள்ள அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் அறக்கட்டளை அமைத்தது குறித்து சிவக்குமாருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவருக்கு நெருக்கமானவர் என்பதால் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் காவல்துறையினர் விசாரணையை துவக்கினார்கள்.
விசாரணையில் பிரபாகரன், தீபக் மற்றும் கொலைக்குக் காரணமான தி.மு.க ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உள்பட 4 பேர் என்பது தெரியவந்தது.இதனையடுத்து, தி.மு.க ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உள்பட 4 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். source : கதிர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















