கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என ஆர்.எஸ்.பாரதி பேசியது குறிப்பிடத்தக்கது. .
இந்த நிலையில் பட்டியல் இன மக்களின் மனதினை புண்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ்.பாரதியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பட்டியல் சமுதாய மக்கள் இடையே எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இடைக்கால ஜாமீன் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஆர்.எஸ். பாரதி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.இதனையடுத்து ஆா்.எஸ்.பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆா்.எஸ்.பாரதி, கடந்த மே 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமாா், ஆா்.எஸ்.பாரதிக்கு மே 31-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தாா். இதனை தொடர்ந்து ஆர்.எஸ். பாரதி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.