தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
வேட்பு மனு முடிந்து தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி,பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் .
மேலும் திமுக சார்பில் அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பொழுது பெண்கள் கேட்கும் முதல் கேள்வி எப்பொழுது மாதம் ஆயிரம் ரூபாய் தரம் போகிறீர்கள் என்று.
மேலும் விவசாயிகள் கேட்கும் கேள்வி எப்பொழுது கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனை தள்ளுபடிச் செய்யப் போகிறீர்கள். திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் கடந்து சென்றுவிடுகிறார்கள்.
மக்கள் திமுகவினரை பார்த்து கேள்வி கணைகளை கேட்பதற்கு முக்கிய காரணம் திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் பொழது நகைகளை உடனடியாக கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று 5 சவரன் நகையை அடகு வைத்து கொள்ளுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகை கடன் தள்ளுபடி செய்து விடுவோம் என ஆசை வார்த்தைகளை காட்டி மக்களை ஏமாற்றினார். இவர் பேச்சை நம்பி ஏராளமானவர்கள் நகைகளை அடகு வைத்துள்ளார்கள். இப்பொழுது வட்டி அசலும் சேர்ந்து விட்டதால் மீட்க முடியாமல் தவித்து வருகிறார்கள். குறைந்தபட்சம் வட்டிச் சலுகையாவது கொடுக்கலாம்.
அதே போல் நீட் தேர்வு ரத்து என பல சலுகைகளை ஓட்டிற்காக அறிவித்துவிட்டு தற்போது கையை விரித்துவிட்டார்கள் என்று மக்கள் புலம்பி தவித்து வருகிறார்கள். இதனால் திமுக வேட்பாளர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.