பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக திமுக முற்போக்கு வேடம் போடுவதை, அதன் முகத்திரையைக் கிழிப்பதுபோல தமிழகத்தில் தொடர்ச்சியாக பெண்களை மானபங்கம் செய்யும், இழிவுபடுத்தும் செயலில் திமுகவினர் ஈடுபட்டுவருகிறார்கள்.
சமீபத்தில்தான் திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களையும் ஆபாச வார்த்தையில் சரமாரியாகப்பேசி இழிவுபடுத்திய வீடியோ வைரலாகச் சுற்றியது. அதில் பெண்களையும் கொச்சைப்படுத்தினார், தன்னிடம் பேசிய காவல்துறை அதிகாரியையும் மிகவும் கொச்சையாகப் பேசினார்.
அதையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர் அந்த ஒரு ஆடியோவோடு அடங்கவில்லை போலும்! ஏற்கனவே இதுபோல பல பெண்களை இழிவுபடுத்தியது தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் வரிசையாக வந்துகொண்டேயிருக்கின்றன.
தற்போது வெளிவந்துள்ள இன்னொரு வீடியோவில் மிகவும்ஆபாசமாக, மிகவும் கீழ்த்தரமாகப் பேசிய ஆடியோ தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி ஆட்சியில் இல்லாதபோதே திமுகவினரின் கிரைம் ரேட் அதிகரித்துக்கொண்டே போகிறது. இவர்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தால் ஒரு பெண்ணைக்கூட தெருவில் நடமாட விடமாட்டார்களே என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவுசெய்துவருகிறார்கள்!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















