தி.மு.க. அறிவிப்பை நம்பி மேட்டூர் தாலுகாவில் மூன்று மாதங்களில் கூட்டாக வாழ்ந்த குடும்பத்தினர் 3600 பேர் பிரிந்து தனி குடித்தனம் சென்று விட்டனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக ஆட்சி வருவதற்காக பல்வேறு இலவசங்களை அள்ளி வீசியது. பிரசாந்த் கிஷோருக்கு சுமார் 380 கோடி கொடுத்து தேர்தல் வியூகங்களை வகுத்தது திமுக.
தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து,100 நாட்களில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு, சிலிண்டருக்கு மானியம் 100, ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் 1000 ரூபாய் என பல வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்தது. திமுக
‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என அக்கட்சித் தலைவர் அனைத்து பிரச்சார மேடைகளிலும் முழங்கினார். அவரது ஆதரவு ஊடங்களில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வாக்குறித்து நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பியது.
சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் மாதம் 1000 ரூபாய் அத்தொகை கிடைக்கும் என மக்கள் நம்பினர். இதனால் கூட்டுக் குடும்பமாக தந்தை தாய் மகன் மருமகள் என வாழ்ந்த ஏராளமானோர் மூன்று மாதங்களில் தனியாக பிரிந்து விட்டனர்.
பிரிந்த குடும்பத்தினர் புது ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தனர்.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் புது ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவில் மட்டும் மூன்று மாதங்களில் 4000க்கும் மேற்பட்டோர் புது கார்டுகளுக்கு விண்ணப்பித்தனர்.
இதில் தகுதி வாய்ந்த 3600 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் தாலுகா ரேஷன் கார்டுதாரர் எண்ணிக்கை 1.32 லட்சத்தில் இருந்து ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளது.
அரசு சலுகையை நம்பி திருமணத்துக்கு பின்பும் தாய் தந்தையுடன் வசித்த 3600 பேர் மூன்று மாதங்களில் தனி குடித்தனம் சென்றுள்ளனர். இதனால் ஒரே மகனுக்கு மணம் செய்து அவர்களை தங்களுடன் வைத்திருந்த ஏராளமான பெற்றோர் தனித்து விடப்பட்டுள்ளனர்.
ஆனால் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. முதியோர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.திமுக தலைவர் குடும்பமோ அனைத்து அதிகாரங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள்,என புலம்பி வருகிறார்கள் திமுகவுக்கு ஒட்டு போட்டவர்கள்.