நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேவர்சோலை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: ‘தமிழக அரசு, பிற மொழிகளை மதிப்பதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில், புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது.
மொழி, கலாச்சாரத்தை பாதுகாக்க அரசியல் சூழல் மாற வேண்டும். அதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. 2024 தேர்தலில், பா.ஜ., 400 எம்.பி.களைப் பெற்று, மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்.
நீலகிரி எம்.பி., ராஜா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை. அவர் சனாதானம், தேசிய அரசியலை பேசுவதால் மக்களுக்கு எந்த உபயோகமும் இல்லை. இதற்கு தீர்வாக பா.ஜ., எம்.பி.,யை தேர்வு செய்ய வேண்டும். நீலகிரி தேயிலைக்கு உரிய விலை கிடைக்க, மத்திய அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியல் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான முயற்சி எடுத்து வருகிறோம்.