மோடி அரசால் இலவசமாக வழங்கப்படும் தடுப்பூசியை திமுகவினர் பணத்திற்காக விற்கிறார்கள்! வானதி சீனிவாசன் MLA ஆவேசம்!

oredesam Vanathi Srinivasan

பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் அவர்கள். தடுப்பூசி செலுத்துவதில் திமுகவின் அராஜகம் குறித்து தமிழக முதல்வர் உடனடியாக தலையீட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் வானதி சீனிவாசன் கூறியதாவது :
திமுக தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட ட அனைத்து வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிப்போம் என திமுக அறிவித்ததை, உடனடியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதனை உடனே நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் தென்னை விவசாயிகள் பயன்பெறுவர் என கூறினார்.

மேலும் மத்திய அரசால் இலவசமாக தரப்படும் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தவிடாமல் இடையூறு செய்கிறார்கள் திமுகவினர். இதுகுறித்து அவர் கூறுகையில் தடுப்பூசி போடும் முகாம்களில் திமுகவினர் டோக்கன்களை ஒட்டுமொத்தமாக கைப்பற்றி விற்று வருகிறார்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கொடுக்குகிறார்கள் தமிழக முதல்வர் உடனடியாக தலையீட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் ,கொப்பரை ஆதார விலை மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.சந்தையில்‌,130. ரூபாய்‌ இருந்த கொப்‌பரை விலை,தற்போது குறைய துவங்கி யுள்ளது.தென்னை விவசாயிகள்‌பாதிக்கக்கூடாது என,அண்டை மாநிலமான கேரளஅரசு, கூட்டுறவு சங்கம்‌ அமைத்து, கூடுதல்‌ விலை கொடுத்து கொள்முதல்‌ செய்‌கிறது.

அதே போல்‌, தமிழக அரசும்‌ மத்திய அரசின்‌ஆதார விலையுடன்‌,கூடுதல்‌ விலை கிடைக்க தேவையான திட்டங்களைவகுக்க வேண்டும்‌.கடந்த, 2016 ல்‌, வானதி தென்னை விவசாயிகள்‌ நலனை பாதுகாக்க, சத்‌துணவு மற்றும்‌ ரேஷன்‌ கடைகள்‌ வாயிலாக, பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய்‌ எண்‌ணெய்‌ விநியோகம் செய்ய வேண்டும்‌,என, ஸ்டாலின்‌ வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்‌. தற்‌போது, அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்‌.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version