திமுகவின் மாய நாடகங்களுக்கு மிக கடுமையாக‌ பதிலளிக்க காலம் அவ்வப்போது ஒவ்வொருவரையும் அனுப்பிகொண்டே இருக்கின்றது.

அந்த தர்மத்தின் கால வரிசையில் இப்பொழுது வந்திருப்பவர் பழனிச்சாமி.

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தத்தால் பாதிக்கபட்ட ஒருவனை காட்டுங்கள், அப்படி காட்டமுடியாமல் மாநில முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? அமைதியான மாநிலத்தின் பொது அமைதியினை ஏன் பொய்யான நாடகம் மூலம் கெடுக்கின்றீர்கள் என அவர் சட்டமன்றத்தில் சீறியபொழுது திமுக சர்வாதிகாரியிடம் பதில் இல்லை

பழனிச்சாமி பேசியது முக்கால உண்மை

குடியுரிமை சட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாநில சிக்கல், பீகாரோ அசாமோ இல்லை இன்னும் அண்டை நாடுகளை ஒட்டிய மாநிலங்களின் சிக்கல் , அந்த மாநிலங்கள் அச்சபடலாம்

மாறாக தமிழ்நாட்டில் என்ன இருக்கின்றது? தென்னகம் இவ்விஷயத்தில் சிக்கல் இல்லா பகுதி

ஈழ அகதிகள்நிலை வேறு, அகதிகளாக வந்தார்கள் அகதி முகாமிலே இருக்கின்றார்கள், அமைதி திரும்பிவிட்ட சொந்த நாட்டுக்கு அவர்கள் செல்வதுதான் முறை

நேற்று பழனிச்சாமி சீறி சொன்ன வார்த்தைகள் இந்நாட்டு மாநிலத்தின் முதல்வர் பேசிய பொறுப்பான வார்த்தைகள், வாழ்த்துக்கள் பழனிச்சாமி

கடந்தமுறை சர்வாதிகாரியின் சட்டை கிழிந்தது, இப்பொழுது அவரின் பொய்முகம் கிழிந்தது , அடுத்து என்ன கிழியும் என்பது விரைவில் தெரியும்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version