ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு சட்டம் ஒழுங்கு சரியில்லை என அனைவரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். தமிழகம் முழுதும் 200 நாட்களில் 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பெண் குழந்தைகள் சீரழிக்கப்பட்டு தற்கொலை,செய்தும் கொலையும் நடந்து வருகிறது.
இது ஒருபுறம் என்றால் திமுகவினர் டார்ச்சர் தாங்கமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களை காக்கும் காவல்துறையினருகே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்கள் தமிழகத்தில் நிம்மத்தியாக வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மாதம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருணாச்சலம் என்பவர் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், இந்த விவகாரம் டிஜிபி சைலேந்திரபாபு வரை சென்றும் பெரிய அளவில் நடவடிக்கை இல்லாததால், இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக நெல்லை மாநகரில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் முடிவதற்குள் தி.மு.க., பிரமுகர்கள் செய்த டார்ச்சரால் , தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வேப்பங்குப்பம் எஸ்.ஐ., வெளியிட்ட ஆடியோ குறித்து விசாரணை நடந்து வருகிறது.வேலுார் மாவட்டம், வேப்பங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் சீனிவாசன், 50. தற்கொலை செய்து கொள்ள போவதாக, இவர் பேசிய ஆடியோ, தற்போது ‘வாட்ஸ் ஆப்’பில் வேகமாக பரவி வருகிறது.
சீனிவாசன் வெளியிட்ட ஆடியோவில் பேசியிருப்பதாவது :நான் வேப்பங்குப்பம் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறேன். ஏலச்சீட்டு மோசடி சம்பவம் குறித்து, தி.மு.க., பிரமுகர்கள் சிலர் வழக்கு பதிவு செய்யக்கூடாது என மிரட்டுகின்றனர். வழக்கு பதிவு செய்யாத காரணத்தை, உயர் அதிகாரிகளிடம் கூறி விட்டேன். இங்கு மணல் கடத்தினால், வழக்கு பதிவு செய்யக்கூடாது என, தி.மு.க., பிரமுகர்கள் சிலர் டார்ச்சர் செய்கின்றனர்.
எனக்கு மன உளைச்சல் அதிகமாக உள்ளது. என்னால் வாழ முடியவில்லை. அதனால், 29ம் தேதி இரவு தற்கொலை செய்து கொள்ள போகிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோவில் மிரட்டிய நான்கு, தி.மு.க., பிரமுகர்களது பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொது தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாங்கள் திமுக ஆட்சிக்கு வந்தவனுடன் 11. மணிக்கு பதவியேற்புக்கு கையெழுத்து 11.05 க்கு ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அனுமதி, அதிகாரிகள் தடுத்தால் அவர்களை பணியிட மாற்றம் என தெரிவித்தார் திமுக ஆட்சிக்கு வந்தது மணல் திருட்டுகள் எந்த வித தடையும் இல்லாமல் நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மணல் கடத்தலில் தி.மு.க நிர்வாகியே நேரடியாக ஈடுபட்டிருப்பதால், குற்றம் செய்தவர்களை கைது செய்யவும், வாகனங்களை பறிமுதல் செய்ய கதற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை கண்டு காவல்துறை சற்று கலக்கம் அடைந்து வருகிறார்கள்.