கொரோனா தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்து வரும் இச்சமயத்தில். தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க முடிவு செய்து இருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் முதல் பொது மக்கள் வரை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் முக்கிய அம்சமாக, கொரோனா தொற்று இன்னும் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறையாத கொங்கு மண்டலத்தை தவிர்த்து, சென்னை, வேலூர், திருச்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜூன் 14) முதல் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 5 மணி வரை சரக்கு கடைகள் இயங்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் தற்போது பேசு பொருளாகி உள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, கொரோனா ஊரடங்கு தளர்வின்போது டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது பொங்கிய சில்லறை போராளிகள்,அரசியல்வாதிகள், தற்பொழுது. தி.மு.க அரசு எடுத்துள்ள இம்முடிவை குறித்து இன்று வரை வாய் திறக்காமல் கள்ள மெளனம் காப்பது ஏன்? என்பது மில்லியன் டாலர் கேள்வி.