“திமுக தொண்டரின் மகள் நாடகக் காதல் படுகொலை என்பதால் இரங்கல் தெரிவிக்க மறுக்கும் மு.க. ஸ்டாலின்!”


உளுந்தூர்பேட்டையில், திருமணம் செய்ய மறுத்ததால், நாடகக் காதல் கும்பலால் திமுக கட்சி தொண்டர் வீரமணியின் 18 வயது மகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் இரங்கலோ கண்டனமோ தெரிவிக்கவில்லை.

ஆனால், அரக்கோணத்தில் இரண்டு பட்டியலின இளைஞர்கள் ‘அவர்களுக்குள்ளான சண்டையில்’ கொலை செய்யப்பட்டதற்காக, அது சாதீய கொலை, அரசியல் கொலை என்றெல்லாம் இட்டுக்கட்டி, கொந்தளித்து, உடனடியாக அறிக்கை வெளியிட்டார் மு.க. ஸ்டாலின்.

இப்போது மட்டும் மு.க. ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? வன்னியர் என்றால் தனது சொந்த கட்சி தொண்டர் வீட்டு துக்கத்திற்கு கூட இரங்கல் தெரிவிக்க மாட்டாரா மு.க. ஸ்டாலின்?

இத்தனைக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்காக தீவிரமாக வேலை செய்துள்ளார் கொலை செய்யப்பட்ட பெண்ணி தந்தை வீரமணி. 2021 தேர்தலிலும் திமுக வேட்பாளருக்காக உழைத்துள்ளார் அவர்.

அப்படிப்பட்ட தீவிர திமுக தொண்டர் மகளையே படுகொலை செய்துள்ளது நாடகக் காதல் கும்பல்.


விருத்தாசலத்தில் காதலிக்க மறுத்த திமுக தோண்டரின் மகள் திலகவதியை நாடகக் காதல் கும்பல் படுகொலை செய்தபோதும் பாமகதான் போராடியது.

இப்போது உளுந்தூர்பேட்டையில் காதலிக்க மறுத்த திமுக தொண்டரின் மகள் சரஸ்வதியை நாடகக் காதல் கும்பல் படுகொலை செய்தபோதும் பாமகதான் போராடுகிது.

ஆனால், நாடகக் காதல் ஒரே காரணத்துக்காக படுகொலைகளை கண்டும் காணாமல் நழுவுகிறது திமுக.

#JusticeForSaraswathi

Exit mobile version