ஒரு ஆளும் கட்சியை சட்டமன்றத்தில் எதிர்த்து பயத்தில் வைத்திருக்க, ஒரு திறமையான எதிர்கட்சி தலைவருக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலே போதும். ஆனால் 80 க்கும் மேல் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் என்ன பயன். எதிர்க்கட்சி தலைவரை சட்டமன்றம், நீதிமன்றம், ஆளுனர் மாளிகை என்று எங்கு சென்றாலும் மதிப்பு இல்லை. கருணாநிதியின் மகன் என்ற ஒரு தகுதியை தவிர வேறு என்ன தகுதி உள்ளது ஸ்டாலினுக்கு, ஒரு செயலையும் ஒழுங்கா செய்ய முடியாத ஒரு தலைவர்தான் முக ஸ்டாலின்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 6 மாத காலமாக செய்துவரும் அரசியல் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எவ்விதக் காரணமும் இன்றி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாதத்திற்கு ஒரு ஆர்ப்பாட்டம் அறிவிக்கும் மு.க.ஸ்டாலின். தன் வீட்டிற்கு வெளியே வந்து 15 நிமிடம் கருப்புக்கொடி ஏந்தியவாறு பத்திரிகைகளுக்கும், மீடியாக்களுக்கும் போஸ் கொடுத்து, சந்தித்து விட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று விடுகிறார். இதுதான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு எதிர்க்கட்சி தலைவராக கடந்த ஆறு மாதமாக செய்துவரும் மக்கள் பணியாக உள்ளது.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்று பகல் கனவு காண்பது. அவரது கனவு கனவாகத்தான் இருக்குமே தவிர, அவரது பகல் கனவு ஒருநாளும் நிஜமாக வாய்ப்பு இல்லை . தி.மு.க நிர்வாகத்தில் அனைத்து முடிவுகளையும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும், மகன் உதயநிதி ஸ்டாலினும் தான் முடிவு எடுத்து வருகிறார்கள், என்பதை சமீபத்தில் தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினர் கு.க.செல்வம் வெட்ட வெளிச்சமாக மீடியாக்களுக்கு பேட்டி அளித்தது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
இந்தப் பேட்டியின் மூலம் தி.மு.கவில் மு.க. ஸ்டாலினுக்கு எந்தவித பவரும் இல்லை என்பதை தமிழக மக்கள் மட்டுமின்றி தி.மு.கவில் உள்ள அனைவரும் நன்றாக புரிந்து கொண்டுவிட்டனர். இதனால் ஸ்டாலினை நம்பி அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்ற தி.மு.க மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும், துர்கா மற்றும் உதயநிதி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தி மு க குறித்தும், தங்களுடைய எதிர்காலம் குறித்தும் மிகவும் குழப்பதிலும் , அச்சத்திலும் உள்ளார்கள்.
தி.மு.கவிலேயே மு.க.ஸ்டாலினுக்கு பவர் இல்லை என்கிற பொழுது தமிழக மக்கள் மத்தியில் அவருக்கு எப்படி பவர் வரும். இதனால் தி.மு.கவில் உள்ள மூத்த நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சிக்கு செல்வது குறித்து ரகசிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். வரும் 2021 சட்டமன்ற தேர்தலோடு மு.க.ஸ்டாலின் தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலை உருவாகும்.
ஸ்டாலின் மூளையாக 2021 சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று தி மு க தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்தது. அப்ப திமுக என்ற பெரிய இயக்கத்திற்கு தலைவராக இருக்கும் ஸ்டாலின் மூளை எங்கே என்று தமிழக மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். தி.மு.க விலேயே பவர் இல்லாத மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் மத்தியில் அவருக்கு எப்படி வரவேற்பு இருக்கும்.
திராவிட கொள்கையில் உருவாகி, துர்காஸ்டாலின் , உதயநிதிஸ்டாலின் கட்டுப்பாட்டின் இருக்கும் திமுக வுக்கும் , பணத்துக்காக வேலை செய்யுற பிரசாந்த் கிஷோர்க்கும் இந்த 2021 சட்ட மன்ற தேர்தலில் மிக பெரிய தோல்வியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் குறிப்பா இந்துக்களுடைய வாக்கு வங்கி மிகப்பெரிய மாற்றத்தையும் , தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழ்நாட்டு மக்களும் விழிப்புடன் இருக்கிறார்கள், தக்க பாடம் புகட்டுவார்கள்.