தமிழகத்தில் கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. போதை பழக்கம் ரவுடிகளின் அட்டுழியம் என தமிழகம் தத்தளித்து வருகிறது. பழிக்கு பழி வாங்கும் சம்பவங்கள் சாதாரணம் ஆகிவிட்டது. கொலை கொள்ளை சம்பவங்களால் பீதியடைந்து வந்த தமிழக மக்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீச்சு வீடிகுண்டு வீச்சு கலாச்சாரம் பரவ தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய திமுக செயலாளராக பொறுப்பு வகித்தவர் ஆராமுதன். இவர் வண்டலூர் மேம்பாலம் அருகே கட்சி அலுவலகம் வைத்துள்ளார். இன்று முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, அப்பகுதியில் விளம்பர பேனர் வைக்க ஏற்பாடு செய்திருந்தார்.மேலும் புதிதாக திறக்கப்படுவதாக இருந்த பேருந்து நிழற்குடையை பார்ப்பதற்காக
நேற்று இரவு 8:15 மணிக்கு, வண்டலுார் மேம்பாலம் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார்.
இதை முன்கூட்டியே அறிந்திருந்த கொலை கும்பல் சரியாக ஆராமுதன்புதிய பேருந்து நிழற்குடை அருகே கார் சென்று நின்றதும் அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை காரின் மீது தூக்கி வீசியுள்ளார்கள்வெடிகுண்டு சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் பயந்து தப்பித்து சென்றுள்ளார்கள். காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்த குண்டுகள் வெடித்த நிலையில், மிரண்டு போன ஆராமுதன் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றபோது, மர்ம நபர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டியதில் கைதுண்டாக விழுந்தது. அப்படியும் தப்பி ஓடியவரை சுற்றி வளைத்து தலை, கை, கால் என பல்வேறு பகுதிகளில் வெட்டி விட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
உயிருக்கு போராடிய ஆராமுதனை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டனர்
முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இந்த நாட்டு வெடிகுண்டு தாக்குதலை வைத்து கொலையை செய்தது கூலிப்படையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார் , 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.