விருதுநகரில் இளைஞர் ஒருவரை திமுக ஒன்றிய துணைத்தலைவர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தை அடுத்த கரிசல்குளத்தை சேர்ந்த துரை கற்பகராஜ், திமுக ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவராக உள்ளார்.
கீழ பாட்டகரிசல்குளம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் போது சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் வெற்றி பெற்ற பிறகு இதுவரை எதுவும் செய்துதரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பகத்சிங் என்ற இளைஞர், வாக்குறுதி அளித்தபடி தங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர் வசதி செய்து தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் பகத்சிங்கை பொதுமக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார், துரை கற்பகராஜ். ஓட்டுக்கு காசு வாங்கிவிட்டு தன்னிடம் வந்து பணிகள் செய்துதர கேட்கலாமா என்றும், தான் இந்த ஏரியாவில் பழைய ரவுடி என்றும் கூறி பகத்சிங்கை துரை கற்பகராஜ் தாக்கியுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனைத்தொடர்ந்து ராஜபாளையம் காவல்நிலையத்தில் துரை கற்பகராஜ் மீது பகத்சிங் புகார் அளித்தார்.
காவல்துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துரை கற்பகராஜின் அராஜக செயலை கண்டு அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நன்றி :- நியூஸ் ஜெ.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















