திமுகவில் தான் காலம் காலமாக வாரிசு அரசியல் தலைதோங்கி இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியதுடன், ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது என கேள்வி எழுப்பினர்.
நிவர் புயலை எதிர்கொள்வது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவி சண்முகம், காலங்காலமாக காங்கிரஸை போன்று திமுகவும் வாரிசு அரசியலை தான் செய்து வருகிறது என்றதுடன், ஊழலை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு ஒரு தகுதியும் கிடையாது என்றார்.
2 ஜி வழக்கில் எப்பொழுது வேண்டுமென்றாலும் தீர்ப்பு வரலாமென குறிப்பிட்ட அமைச்சர், உலகளவில் ரூ.1.75 கோடிக்கு ஊழல் செய்த ஒரே அரசு திமுக தான் என சாடினார். எதைபற்றியும் சிந்திக்காமல் பேசும் ஸ்டாலின் முதலில் தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கவேண்டுமென தெரிவித்த அமைச்சர், காங்கிரஸ் – திமுகவை போல் பாஜகவிலோ அல்லது அதிமுகவிலோ வாரிசு அரசியல் உள்ளதா என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ், திமுக ஆட்சியில் இலங்கை தமிழர்கள் கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்திய மீனவர்கள் சுந்ததிரமாக செயல்படுவதாக எடுத்துரைத்தார்.
மேலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது என்றும் எதிகட்சி தலைவர் ஸ்டாலினை சட்டத்துறை அமைச்சர் வறுத்தெடுத்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















