உதயநிதி விழாவில் பெண்ணை தாக்கிய தி.மு.க வினர்! கண்டுகொள்ளாமல் சென்ற உதயநிதி ஸ்டாலின்!

சென்னை நிலங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் கருணாநிதி சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செந்தில் பாலாஜி சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

விழாவில் ஏழைகளுக்கு இலவச அரசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதனால் அங்கு ஏழை மக்கள் நூற்றுக்கும் அதிகமான குவிந்தனர்.

கருணாநிதி சிலையினை திறந்து வைத்த உதயநிதி இலவச அரிசியை வழங்கினார், அப்போது கூட்ட நெரிசலால் ஒரு பெண்ணுக்கு கொடுத்த அரிசி கீழே கொட்டியது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர் இதை பார்த்தஅமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக கிளம்பினார்.

சில பெண்கள் உதயநிதியிடம் மனு கொடுக்க முயன்றனர் அதை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினார் உதயநிதி.கூட்டத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி பெண் உட்பட மூன்று பெண்கள் கீழே விழுந்தனர்
.
கீழே விழுந்த பெண்களை திமுகவினர் தூக்கி விட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர் அப்போது ஏன்மா இந்த இடத்துக்கு வந்த என கூறியபடி ஒரு பெண்ணின் கன்னத்தில் தி.மு.கவினர் அறைந்தார்கள்.

மாற்றுத்திறனாளி பெண்ணையும் அடிக்க கையை ஓங்கிய திமுகவினர் கேமரா இருப்பதை கண்டதும் அமைதியாகி அவரைக் கூட்டிப் போய் சேரில் உட்கார வைத்து கடைசிவரை மனு கொடுக்க முடியாததால் பெண்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு சென்றார்கள்!

பெண் நீதி பேசும் திமுக பெண்களுக்கு எதிராக செயல்படுவது ஒன்றும் புதிதல்ல . என்று கூட்டத்தில் இருந்த முன்களப்பனியர்கள் பேசிக்கொண்டார்கள்.

Exit mobile version