திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பேரூராட்சியின் திமுக கவுன்சிலரின் மகள் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினரும் உறவினர்களும் அப்பகுதியில் தேடியுள்ளனர்மாணவி கிடைக்காத நிலையில் ஏழு மணி அளவில் காவல் நிலையத்தை தனது மகளை காணவில்லை என புகார் அளித்தனர். ஆனால் அந்த புகாரின் மீது அதிகாலை வரை காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கட்டமநாயக்கன்பட்டியை பகுதியை சேர்ந்தவர் விவசாய குமார். இவரது மனைவி அமுதா குஜிலியம்பாறை பேரூராட்சி பத்தாவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர்களின் மகள் குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி படித்து வருவதாகவும், நேற்று காலை பள்ளிக்கு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
ஐந்து மணிக்கு வர வேண்டிய தன்மகள் வராதால் அனைத்து பகுதிகளும் தேடிவிட்டு மாலை 7 மணிக்கு குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தும், அதிகாலை வரை காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் கிராம மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுயிட்டனர்.

உடனடியாக காவல்துறையினர் மற்றும் ஆர்டிஓ தலைமையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், தற்காலிகமாக தங்களது முற்றுகை போராட்டத்தை நிறுத்தியுள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- தனது மகள் தினமும் அரசு பேருந்தில் குஜிலியம்பாறை மேல்நிலைப் பள்ளிக்கு சென்று விட்டு, மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் எங்கள் பகுதிக்கு வரும் அரசு பேருந்தில் வீடு திரும்பி விடுவார். ஆனால், நேற்று மாலை எனது மகள் வீடு திரும்பவில்லை. அனைத்து பகுதிகளும் தேடியும் கிடைக்கவில்லை. எங்களது மகளுக்கு 14 வயது தான் ஆகிறது. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்களது ஊரின் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 4 பேர் கடத்தியதாக கூறுகின்றனர். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்களது மகளை மீட்டு தர வேண்டும். விடிய விடிய தூங்காமல் காத்திருந்து எங்களது மகள் வராத காரணத்தால், கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி, தற்போது மாவட்ட ஆட்சியரை சந்தித்து எங்களது பிரச்சனையை கூறி, எங்களது மகளை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக வந்துள்ளோம், என்று கண்ணீர் மல்க கூறினார்.