பா.ஜ.க இளைஞரணியை சமாளிக்க முடியமால் திணறும் தி.மு.க இளைஞரணி! களம் மாறும் தமிழகம்
தற்போது தமிழகத்தில் கொரோனாவை தாண்டி அரசியல் சூடுபிடித்துவிட்டது. இதற்கு காரணம் வரும் 2021 தேர்தல் ஆகும். அனைத்து கட்சிகளுமே தேர்தலுக்கு தயாராவது கண்முன்னே தெரிகின்றது. திமுகவை பொறுத்தவரை தேசிய கல்வி கொள்கையை வைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு நடிகர் நடிகைகளை பயன்படுத்த தொடங்கியது. பாஜகவும் அதே யுக்தியை கையாண்டு வருகிறது தேசிய கல்வி கொள்கை, மத்திய அரசின் நலத்திட்டங்களை வைத்து தேர்தலை சந்திக்க தயாராகிவருகிறது. மேலும் திமுகவை நேரடியாக தாக்கி வருகிறது பா.ஜ.கவின் இளைஞரணி .
முதன் முதலில் கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் தி.மு.கவை சேர்ந்த சிலர், எம்பெருமான் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும், வேலையும், பெண்களையும் மிகக் கேவலமாக விமர்சித்தனர். இது ஒட்டு மொத்த இந்துக்களையும் கொந்தளிக்கச் செய்தது.
இதுபற்றி அரசியல் கட்சிகள் வாய் திறக்காமல் மௌனியாக இருந்தன. இந்த நேரத்தில் பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம், கறுப்பர் கூட்ட கயவர்களின் இழி செயலை கண்டித்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
பாஜக இளைஞரணி சார்பாகவும், இந்து அமைப்புகள் சார்பாகவும், இந்துக்கள் சார்பாகவும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த அயோக்கியர்கள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதிலிருந்து திமுகவை சூரசம்காரம் செய்ய தொடங்கி விட்டது பா.ஜ.க இளைஞரணி!
இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.கவினர், பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வத்தை, இழிவுபடுத்தி, சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பரப்பினார்கள். இதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத வினோஜ் ப செல்வம், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க இளைஞரணி புதிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்களும், பொதுமக்களும் பேராதரவை அளித்து வருகின்றனர்.
இது தி.மு.க வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்தது. இதனால் திமுக கைக்கூலிகளின் மூலமாக வினோஜ் ப செல்வத்திற்கு எதிராக பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டன. மதுரையில் பாஜக இளைஞரணி நிர்வாகி ஒருவர் வழங்கிய பொம்மை துப்பாக்கியை அனைத்து திமுக ஆதரவு ஊடகங்களிலும் வெளியிடச் செய்து, வினோஜ் ப செல்வத்தை பயங்கரவாதி போன்று சித்தரிக்கும் வேலையை கச்சிதமாக அரங்கேற்றினார்கள். அதோடு சமூக வலைத்தளங்களிலும் அந்த வீடியோக்களை பரப்பினார்கள்.
இதற்கிடையே தமிழகத்தில் பஸ் வசதி இல்லாத பகுதிகளை சேர்ந்த நீட் தேர்வு எழுதும் மாணவ – மாணவிகளுக்கு இலவச வாகன வசதி ஏற்படுத்தும் சேவையில் பாஜக இளைஞரணி இறங்கியது.
இது நீட் தேர்வை வைத்து பிழைப்பு நடத்தி வரும் தி.மு.கவிற்கு பலத்த அடியாக அமைந்தது. இதற்கு எதிர்வினையாற்ற திமுகவிற்கு திராணி இல்லை. அதோடு நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் உதயநிதி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்களிடம் இதற்கு துளிகூட ஆதரவு இல்லை.
அதேநேரம் பா.ஜ.க இளைஞரணி சார்பில் அதன் தலைவர் வினோஜ் ப செல்வம் ஏற்பாடு செய்துள்ள நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவச வாகன வசதி சேவைக்கு கட்சிகளைத் தாண்டி அனைத்து தரப்பினரிடமும், பொதுமக்களிடமும் ஆதரவு பெருகியுள்ளது.
தனால் ஆத்திரமடைந்த திமுகவினர், வழக்கம்போல தங்களின் தரத்திற்கு ஏற்றவாறு, மிகக் கீழ்த்தரமான பித்தலாட்ட வேலைகளில் இறங்கியுள்ளனர்.
“இந்தி படித்தால் தமிழ் அழியாது, திமுகதான் அழியும்” என்று வினோஜ் ப செல்வம் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதுதொடர்பாக நாரதர் மீடியா என்ற இணையதள பத்திரிகையில் போஸ்டர் ஒன்று வெளியாகி பரவியது. அந்த போஸ்டரை போட்டோஷாப் மூலம் எடிட் செய்து வினோஜ் ப செல்வம் சொல்லாத ஒன்றை சொன்னதாக பதிவு செய்து பரப்பினார்கள்.
திமுக கைக்கூலிகளில் ஒருவரான சவுக்கு சங்கர் என்பவர் முதற்கொண்டு, அனைத்து திமுக கைக்கூலிகளும் அந்த மோசடி போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள்.இதுதொடர்பாக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வமும், நாரதர் மீடியா இணையதள பத்திரிகையும் உண்மை செய்தியை உடனடியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்து விட்டார்கள்.
இதன்மூலம் திமுக மீண்டும் ஒரு முறை தனது மூக்கை உடைத்துக் கொண்டது.
“பாஜக இளைஞர் அணியையே எதிர்கொள்ள முடியாத திமுகவா, வருகின்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது?” என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
மேலும் உதயநிதி இந்தி தெரியாது போடா என டீ சர்ட் அணிந்து புதிய பிரச்சாரத்தில் இறங்கினார். அதை பிரபலமாக்குவதற்கு இசையமைப்பாளர் யுவன் போன்ற தரை பிரபலங்கள் தேவைப்பட்டது. இதற்கு போட்டியாக பாஜக இளைஞரணி இந்தி படித்தால் தமிழ் அழியாது திமுகதான் அழியும் என பிரிண்ட் செய்யப்பட்ட டீ ஷர்ட் அணிந்து களத்தில் இறங்கினார்கள். இதற்கு ஆதரவு பெருகியது. பிரபலங்கள் இல்லாதா இளைஞர்களை மட்டுமே கொண்டு பாஜக இளைஞரணி புதிய உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்து விட்டது. இதை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. திமுகவின் இளைஞரணி.
இளைஞர்களை நோக்கி தமிழக அரசியல் திரும்பியுள்ளதை இது காட்டுகிறது!