தமிழகத்திற்கு வரி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாக தயாநிதி மாறன்,டிஆர் பாலு ஆகியோர் கூறிவந்த நிலையில் வெள்ளை அறிக்கை மூலம் பதிலடி தந்துள்ளார் மத்திய நிதி அமைச்சர். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு நிதி பகிர்வு எவ்வளவு என்பதையும் தற்போது பாஜக அரசில் தமிழகத்திற்கு வழங்கிய நிதி பகிர்வையும் வெள்ளை அறிக்கையில் தந்து பதிலடி தந்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தேய்விக்கப்பட்டது
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற அவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.ஆங்கிலம், ஹிந்தியில் இடம்பெற்ற இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 10 ஆண்டுகளாக பொருளாதாரத்தை மந்தமாக்கியது. 2014ல் பிரதமர் மோடி பதவியேற்றபோது, பொருளாதாரம் பலவீனமாக இருந்தது.
வாராக்கடன்கள் காரணமாக வங்கிகளும் பலவீனமாக இருந்தன. காங்., ஆட்சி காலத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது. மன்மோகன் சிங் அரசு பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியது. காமன்வெல்த் போட்டியில் பெரிய ஊழல் நடந்துள்ளது. அந்த ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவில் இருந்தன. டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மோசமாக இருந்தன.
மேலும் தமிழகத்திற்கு திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நிதி உதவி 2004-முதல் 2014 வரை ரூ.5,924.42 கோடி. அதே நேரத்தில்பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு 2014 முதல் 2024 வரை ரூ.2,30,893 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகமாகும்.
2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வரி பகிர்வுரூ.94,977 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 2014 முதல்2024 வரை ரூ.2,77,444 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இது 192 சதவீதம் அதிகமாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது மத்திய அரசிற்கு தமிழகத்தின் வரி அதிகமாக கட்டப்படுகிறது என வாதம் வைத்தால் மோடி அரசு வந்த பிறகு வரி கட்டாதவர்கள் காட்டுகிறார்கள் புதிய தொழில்கள் தமிழகத்தில் மோடி அரசு வந்த பிறகு தான் தொடங்கப்பட்டுள்ளது என்ற பதில் வரும். திமுகவின் போலி கபட நாடகத்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்.