ரேட்டிங் ஸ்டாரை நம்பி ஏமாறாதீர்கள்! இதுவும் போலியா 19 சீன பொருட்களுக்கு தடை விதித்த அமேசான்!
சீன தயாரிப்புகள் மலிவு விலையில் கிடைப்பதால் மக்கள் அதிகமாக சீன பொருட்களை வாங்குகிறார்கள். சீன பொருட்கள் பற்றி அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான் ஒரு தடவை ரிப்பேர் ஆனால் அதை தூக்கி எறிவதை தவிர வேறு வழியில்லை. மின்னணு பொருட்கள் ஆன்லைனில் வாங்குவது அதிகரித்துள்ளது. முக்கியமாக ஹெட் செட் ப்ளூடூத் பவர் பேங்க் போன்ற மின்னனு பொருட்கள் தான் அதிகமாக ஆன்லைனில் வாங்கப்படுகிறது.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனையாளர் அமேசான் நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் தங்களது தளத்தில் விற்பனையிலிருந்த 19 சீன மின்னணு கருவிகளை அதிரடியாக தடை செய்துள்ளது. அதற்கு காரணம் அவற்றுக்கு போலியான ஸ்டார் ரேட்டிங், நல்லவிதமான விமர்சனங்களை சீன நிறுவனங்களே ஆள் அமைத்து போட வைத்தது வெளிச்சத்திற்கு வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பார்த்தல் மின்னணு பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும் என்றால் அது சீனாவின் தயாரிப்புகள் தான் ஆன்லைன் விற்பனையில் மலை போல குவிந்து கிடக்கின்றன. ஒரு பெரிய நிறுவனம் தரமான பொருட்களை மக்களிடம் சேர்ப்பதற்காக வல்லுநர் குழு அமைத்து தயாரிக்கிறது. சீனாவோ அதை அப்படியே பிரதி எடுத்து மலிவான சாதனங்களை கொண்டு தயாரித்து மிகக்குறைந்த விலையில் விற்று அதிக லாபம் சம்பாதிப்பது வருகிறது. சீனாவின் தயாரிப்புகள் ஒரு சில நாட்கள் பயன்பாட்டில் இருந்தாலே அதிசயம் தான்.அதுவே வாங்கியவர்களுக்கு லாபம்.
வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் பொது சற்று எச்சரிக்கையுடன் தான் வாங்குகிறார்கள். ஸ்டார் ரேட்டிங் கமண்ட்ஸ் எல்லாம் பார்த்து தான் வாங்குகிறார்கள். அதிலும் மோசடி செய்துள்ளது சீன நிறுவனம்.
அமேசான் தளத்தில், டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸின் நிறுவனம். ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோச்சி வருகிறது . இந்த நிறுவனம் விற்பனை செய்யும் பொருட்களை தரமானவை என காட்டுவதற்காக வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன்களை தந்து 5 ஸ்டார் ரேட்டிங் போடச் செய்தது, தயாரிப்பை பற்றி ஆஹோ ஓஹோ என புகழ்ந்து எழுதச் செய்தது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன.
இவை அமேசானின் கவனத்துக்கு வந்ததும் அந்நிறுவனங்களுக்கு தடை விதித்தது. இந்நிறுவனங்கள் 7,400 கோடி ரூபாய்க்கு இதுவரை பொருட்களை விற்பனை செய்துள்ளதாக அமேசான் கூறுகிறது. பவர் பேங்குகள், ப்ளூடூத் ஹெட்செட்கள், கண்காணிப்பு கேமரா, மின்னணு பல் துலக்கும் கருவி, காற்று சுத்திகரிப்பான், ஸ்பீக்கர்கள் ஆகியவை அந்த தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் அடங்கும்.