புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.ஆளும் கட்சியின் அராஜகம் அரங்கேறியது. அதை ஊடகங்கள் மறைத்தன.அங்கங்கு தேர்தல் அலுவலர்கள் திமுகவினரால் தாக்கப்பட்டார்கள். ஊடகம் எதையும் கண்டு கொள்ளாமல் பாஜக பற்றிய பொய்யான செய்தியை பரப்பின.
கோவை குருடம்பாளையம் வார்டு இடைதேர்தலில் 9 -வது வார்டில் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக மட்டுமே போட்டியிட்டது . சுயேட்சை வேட்பாளராக நாமினேஷன் போட்ட கார்த்திக் விலகி இருந்தாலும் வாக்கு சீட்டில் அவர் பெயரும் கார் சின்னமும் இருந்தது .
கார்த்திக் என்பவர் பாஜகவை சேர்ந்தவர் இவர் வசித்து வருவது கோவை குருடம்பாளையம் 4 வார்டில் இவரின் குடும்பத்திற்கும் 4 வது வார்டில் தான் ஓட்டுகள் உள்ளது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இவர் போட்டியிட்டது 9 வது வார்டில் இவர் சுயேட்சையாக போட்டியிட்டார். இவருக்கு ஒரு ஓட்டு தான் விழுந்தது.
உடனே தமிழக ஊடகங்கள் பாஜக வேட்பாளர் ஒரு ஓட்டு என கிண்டல் செய்தார்கள். குடும்பத்தில் உள்ளவர்களே ஓட்டு போடவில்லை என கேலி செய்தார்கள். மேலும் இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அண்ணாமலை தனக்குரிய பாணியில் கேள்வி கேட்ட நிருபரை பங்கம் செய்து விட்டார்.
அண்ணாமலை இதுகுறித்து பதில் அளிக்கும் போது ; கார்த்திக் என்பவர் தாமரை சின்னத்தில் போட்டியிட்டாரா. அவர் கார் சின்னத்தில் மக்களுக்கு சேவை செய்யாலாம் என என எண்ணி ஜனநாயக தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவரை கிண்டல் செய்வது நியமற்றது.
மேலும் பத்திரிகையாளர்கள் அடிப்படை அறிவுடன் {கமான் சென்ஸ்} கேள்வியை கேட்கவேண்டும், எங்கள் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் தாமரை சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்ற அரசியலை புரிந்து கொண்டு கேள்வியை கேளுங்கள் என பத்திரிகையாளரை பங்கம் செய்தார்.
உடனே பத்திரிகையாளர்கள் நிருபர்கள் கேள்வி கேட்டால் அவர்களை தரைகுறைவாக பேசுவதா என குரலை உயர்த்தினார்கள் அதற்கும் அண்ணாமலை அசைந்து கொடுக்கவில்லை யாரும் நிருபர்களை தரக்குறைவாக பேசவில்லை கமான் சென்ஸ் என்பது பொதுவான வார்த்தை என நிருபர்களை ஒரு கை பார்த்து விட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள் மேலும் சேனலை subscribe செய்து ஆதரவு கொடுங்கள்
நீட் தற்கொலைகள், திமுக MPகள் மீதான கொலை வழக்குகள்.இதெல்லாம் திசை மாத்தனும்னா சுயேட்சை வேட்பாளர பாஜக வேட்பாளர்னு திமுக ஆதரவு ஊடகங்கள் கிளப்பிவிடுகின்றார்கள் என்று ஒரு தரப்பினர் கூறிவருகிறார்கள்.