நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., இனி 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது.வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில்,இந்த சீர்திருத்தம் நாளை 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய உள்ளது.
GST வரிகுறைப்பு நடவடிக்கை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும் என பாரதபிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர்,நாட்டு மக்களுக்கு நவராத்திரி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
நவராத்திரியின் முதல் நாளில் ஆத்ம நிர்பர் பாரதத்தை நோக்கி ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறோம் என்றும், நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 99% பொருட்களின் விலை குறையும் என தெரிவித்தார். பிரெட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்றும் அவர் கூறினார்.
உங்கள் சேமிப்பு அதிகரிக்கும், உங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்க முடியும் என்றும், ‘ஜிஎஸ்டி வரிகுறைப்பு நடவடிக்கை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும் என்றும் பிரதமர் கூறினார். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரி சிக்கல் ஜிஎஸ்டி மூலம் அகற்றப்பட்டுள்ளது என்றும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 99% பொருட்களின் விலை குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரே நாடு, ஒரே வரி என்பது தற்போது முழுமை பெற்றுள்ளது என்றும், இந்தியா சுயசார்பை எட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பிரதமர மோடி குறிப்பிட்டார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















