Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை மறுத்ததன் மூலம் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை புதைத்த திராவிட கட்சிகள்!

Oredesam by Oredesam
October 27, 2021
in செய்திகள், தமிழகம்
0
மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை மறுத்ததன் மூலம் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை புதைத்த திராவிட கட்சிகள்!
FacebookTwitterWhatsappTelegram

”கிராமப்புற மாணவர்களின் கல்வியில் நவோதயா பள்ளிகள் ஏற்படுத்தும் நேர்மறை விளைவுகளை எடுத்துரைத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையை, தமிழக மக்களின், ஏழை மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ள சமூகச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரும் கூர்ந்து படிக்க வேண்டும். நவோதயா பள்ளிகளை மறுத்ததன் மூலம் தமிழகம் என்ன பயன் பெற்றது என்பதை இதயச் சுத்தியோடு திரும்பிப் பார்க்க வேண்டும்.

‘நவோதயா பள்ளிகளில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளில் பயிலும் 20 சதவீதத்திற்கு மேலானோர், அகில இந்தியத் தேர்வுகளில் வெற்றி பெற்று வருகின்றனர். மும்மொழி கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது என்று தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் கட்சிகள் புறக்கணித்து வருகின்றன. தமிழ்நாட்டில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைதான் இருக்கிறது. மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் திமுக, அதிமுகவினர், அவர்களின் உறவினர்கள் இன்று சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்துவது வியப்பாக இருக்கிறது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

அதேபோன்று இந்தக் கட்சிகளின், தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்தப் பள்ளிகளில் பயிலும்போது, கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் நவோதயா பள்ளிகளைப் புறக்கணிப்பது சரியல்ல’ என்று பாலகுருசாமி கூறி இருக்கிறார். ‘அதேபோன்று எட்டாம் வகுப்பு வரை மாநில மொழியிலேயே பாடம் நடத்தப்படுகிறது. ஆங்கிலம் இரண்டாவது மொழியாக இருக்கும். இது தமிழ்நாட்டின் பயிற்று மொழி சட்டத்திற்கு எந்த வகையிலும் எதிரானதாக இருக்காது’ என்றும் கருத்துகளை முன் வைத்துள்ளார்.

தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா பள்ளிகள் உள்ளன. 1986-ம் ஆண்டுத் தேசியக் கல்விக் கொள்கை வெளியானபிறகு, மத்திய அரசு ‘ஜவஹர் நவோதயா பள்ளிகள்’ என்ற பெயரில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கியது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை உள்ள இந்தப் பள்ளியில், நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும். 8-ம் வகுப்புவரை பயிற்று மொழி, தாய்மொழி அல்லது மாநில மொழியாக இருக்கும்.

அதன் பிறகு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் வழியாகவும், சமூக அறிவியல் பாடங்கள் இந்தி அல்லது ஆங்கிலம் வழியாகவும் பயிற்றுவிக்கப்படும். முழுவதும் மத்திய அரசின் நிதியில் இயங்கும் இந்தப் பள்ளிகள் இரு பாலரும் பயிலும் உறைவிடப் பள்ளிகளாகச் செயல்படுகின்றன. உணவு, சீருடை, பாடநூல்கள் உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக 600 ரூபாய் பெறப்படுகிறது.

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோர் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் எனில், மாதந்தோறும் ரூபாய் 1,500 அல்லது அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பெறுகின்ற குழந்தைகள் கல்வி உதவித் தொகை இவற்றில் எது குறைவானதோ அது வசூலிக்கப்படும். தமிழகம் நீங்கலாக, இந்தியா முழுக்கத் தற்போது 636 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு நவோதயா பள்ளி தொடங்குவதுதான் மத்திய அரசின் திட்டம். கிராமப்புற மக்கள், பழங்குடி மக்கள், பெண்கள் என அடித்தட்டு ஏழை மக்களுக்கும் நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் நவோதயா பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இதற்கான கட்டிடம், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. மாநில அரசு அப்பள்ளிக்கு உரிய இடத்தை மட்டும் அளித்தால் போதும். வேறெந்தச் செலவும் அதற்குக் கிடையாது. நவோதயா பள்ளியைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர், மத்திய அரசின் பிரதிநிதி, பெற்றோர், அந்த ஊரின் முக்கியமான நபர்கள் உள்ளிட்ட ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் வழிகாட்டலின்படியே பள்ளி இயங்கும்.

நவோதயாவில் இந்தி கற்பிக்கப்படுகிறது. அதனால், அப்பள்ளி எங்களுக்கு வேண்டாம் என்று தமிழகத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். இது சரியல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், அவை கட்சியினர் நடத்தும் பள்ளிகளாக இருந்தாலும், இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. விருப்பம் உள்ள பெற்றோர் பள்ளியில் சேர்க்கப் போகிறார்கள். சிலர், ‘எல்லோருக்கும் நவோதயா பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா’ என்று கேட்கிறார்கள். ஒரு நவோதயா பள்ளியில் ஒரு வகுப்புக்கு 80 பேர் என்றால், 6 முதல் 12-ம் வகுப்பு வரை 560 பேர் படிக்கலாம். தமிழ்நாட்டில் சுமார் இருபதாயிரம் மாணவர்கள் பலன் அடைவார்கள். அதுவும், மாநில அரசுக்கு எந்தவித நிதிச் சுமையும் கிடையாது.

பெற்றோர்களுக்கு இன்றிருக்கும் பெரும் தவிப்பு, தங்கள் பிள்ளைகளுக்கு சரியான கல்வியைத் தேர்வு செய்வதுதான். தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக, வீட்டையும் வேலையையும்கூட மாற்றிக் கொள்வோர் இருக்கிறார்கள். எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்ற கேள்வியில் தொடங்கி, எந்தப் பாடத் திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதுவரை ஏகப்பட்ட குழப்பங்கள், சந்தேகங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் நவோதயா பள்ளி மிக அவசியம்.

எனவே, தமிழக அரசு நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் கொண்டு வருவதற்கு உரிய முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். இதில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், அது மாநிலக் கட்சியாக இருந்தாலும் சரி, தேசியக் கட்சியின் மாநிலப் பிரிவுகளாக இருந்தாலும் சரி, தமிழ்நாடு அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

விமர்சனக் கணைகளைத் தேர்தல் நேரங்களில் செலுத்த வைத்துக்கொண்டு, மற்ற நேரங்களில் மக்கள் நலனுக்காகத் தமிழக அரசியல் கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இனிமேலாவது, ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு தட்டிப் போவதைத் தவிர்ப்பதற்கு அனைவரும் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும்”.

இவ்வாறு காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பிஜேபியின் தமிழக ராஜ்யசபா எம்பிக்கு
வாழ்த்துகள்.

March 10, 2020
என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்

ஊழல் குறியீட்டில் தமிழகம் தான் முதலிடம்! அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு

December 9, 2021
பாராலிம்பிக் வரலாற்று சாதனை படைத்த இந்தியா:மோடியின் புதிய இந்தியாவில் திறமைக்கு மரியாதை!

பாராலிம்பிக் வரலாற்று சாதனை படைத்த இந்தியா:மோடியின் புதிய இந்தியாவில் திறமைக்கு மரியாதை!

September 6, 2021
கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த  பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!

கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!

November 14, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x