புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ண சாமி அவர்களின் மகன் ஷியாம் கிருஷ்ணா சாமி. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவை கிழித்து தொங்கவிட்டுள்ளார். சட்டமன்ற வளாகத்தில் கருணாநிதி படத்தை திறந்து வைப்பதற்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்கள் தமிழகம் வந்தார். இது குறித்து திமுக ஆதரவாளர் மீம் கிரியேட் செய்து ஷியாம் கிருஷ்ண சாமியை டேக் செய்து பதிவிட்டார். இதை தொடர்ந்து திமுகவை வச்சி செய்து விட்டார் ஷியாம்
ஷ்யாம் கிருஷ்ணசாமி ட்விட்டர் பதிவு :
முதல்வரான பின் பல்வேறு கோரிக்கைகளோடு பிரதமரைச் சந்திக்க சென்ற ஸ்டாலின், வெறும் கையோடு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது என்ற பாடத்தை நன்கு கற்றுக் கொண்டார்கள்! அதன் விளைவே இல்லாத நூற்றாண்டுக்கு ஒரு விழாவும் கொண்டாட்டமும்!
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும், பெட்ரோல் – டீசல் விலை GST வளையத்திற்குள் கொண்டு வரப்படும், லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்; தமிழகத்திற்கான நிலுவைத் தொகை 18,000 கோடி பெற்றுத் தரப்படும் போன்ற கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. இவர்களுக்கு சுயமரியாதை இயக்கம்னு பெயர் வைத்தது யார்?
தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்க ‘சங்கி’ அரசை அண்டிப் பிழைக்க திமுக தயார் ஆகி கொள்ளலாம். இதெல்லாம் அவர்களுக்கு புதிதல்ல. அதிகாரத்தில் இருப்பவர்களை அண்டி பிழைப்பது எப்படி என்ற விதையை நீதிகட்சியின் நடேச முதலியாரும், தியாகராயரும், TM நாயரும் 1921-லேயே விதைத்து விட்டார்கள்! கொண்டாடுங்கள்! நன்றாக கொண்டாடுங்கள்!!நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயரை
அண்டி பிழைத்ததையும், இனி சங்கிகளை அண்டி பிழைக்க போவதையும் எண்ணி அகமகிழ்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடுங்கள்!காலம் பொல்லாதது; எதை மறைக்க முயற்சி செய்தீர்களோ, அது இப்போது அம்பலப்பட்டு விட்டது!
‘இந்திய’ தலைவர்களிடம் அங்கிகாரத்திற்காக ஏங்கி கிடப்பதும் பெருமையாக நினைப்பதும் தான் ஒன்றிய புராணம் பாடும் திராவிட ஸ்டாக்’களின் வரலாறாம் திராவிட ஸ்டாகிஸ்டுகள் நிறம் மாறுவது ஆச்சரியப்படும் விசயம் ஒன்றுமில்லை. ஒரே வருத்தம் தான், இவர்கள் சங்கிகளுக்கு எதிராக போட்ட நாடகத்தை முழுமையாக நம்பி ஏமார்ந்து போன தமிழக கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும், எண்ணற்ற இளைஞர்களும் இனிமேலாவது விழித்துக் கொள்வார்களா? என்பதே கேள்வி.
சட்டமன்றத்தில் அண்ணாதுரை படம் திறக்க இந்திரா காந்தி வந்தாராம்,கருணாநிதி படம் திறக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தே வந்தாராம்… பெருமை பட்டுக்கொள்ளும் திமுகவினர்! இப்படி இந்திய தேசிய தலைவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்கி கிடக்கும் தாழ்வு மனப்பான்மைய மறைக்கத்தான் ஒன்றிய அரசு கூப்பாடா?!