தமிழகத்தில் கள்ளசாராயம் போதைப்பொருள் பழக்கவழக்கம் என்பது சர்வசாதாரணமாகி விட்டது கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10லட்சம் நிவாரணம் என அரசு அறிவித்தது இது பெரும் எதிர்ப்பலைகளை கிளப்பியது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்களிடையே போதை பொருள் விற்பனை தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை.இது தொடர்பாக ஹிந்து முன்னணி கூறுகிகையில்
கோவை சுங்கம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்றதாக சினிமா துணை நடிகர்களான யாசிக் இலாஹி மரியா, சினேகா ஸ்ரீ, கிருஷ்ணன், முஜிபுர் ரகுமான் ஆகிய ஐந்து பேர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ள மேடு பகுதியைச் சார்ந்த அப்துல் கலாம், கரும்புக் கடை பகுதியைச் சார்ந்த ஆஷிக், ரிஸ்வான் மற்றும் வடமாநிலத்தைச் சார்ந்த சச்சின் ஆகியோருக்கு தொடர்பு என அவர்களை தேடி வருகின்றனர். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தொடர்ச்சியாக இது போன்ற கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை என்பது நடைபெற்று வருகிறது.
தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து நடைபெற்று வரும் இந்த போதை கலாச்சாரத்தை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது…
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















