ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடினார்கள் நேற்றைய தினம் இந்தியாவின் 77-வந்து சுதந்திர தினம் உலகமெங்கும் உள்ள இந்தியர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் தலைநகர் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
மேலும் உலகமெங்கும் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்திய தேசிய கொடிகள் மிளிர செய்தன. இந்த நிலையில் உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றான துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவில் ஆகஸ்ட் 14 சுதந்திர தினமான பாக்கிஸ்தான் தேசிய கொடியை காண்பிக்காததால் அந்நாட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதே வேளையில் நேற்று இந்தியாவில் கொண்டாடப்பட்ட சுதந்திரதின விழாவை அடுத்து புர்ஜ் கலிபாவில் இந்திய தேசிய கொடி மிளிர்ந்தது.
பாகிஸ்தானின் சுதந்திரதினம் ஆகஸ்ட்14 ம் தேதி கொண்டாடப்பட்டது. துபாயில் உள்ள பாகிஸ்தானியர்களும் தங்கள் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகினர். இதற்காக புர்ஜ் கலிபா கட்டடத்தின் முன்னதாக குவிந்தனர். இந்த கட்டடம் உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றாகும். அது மட்டுமல்லாது உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் மற்றும் தினங்கள் குறித்தவற்றை கட்டடத்தில் பிரதிபலிப்பது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில் தங்கள்நாட்டின் தேசிய கொடியை புர்ஜ் கலிபாவில் காண்பிப்பார்கள் என்ற எதிர்பார்போடு காத்திருந்த பாக்கிஸ்தான் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் பாகிஸ்தான் மக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும்,தொடர்ந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷங்களும் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் பெண்மணி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் தேசிய கொடி காட்டாதது வருத்தமளிக்கிறது. பாகிஸ்தான் மக்களின் மீதான வெறுப்பை இது காட்டுவதாக உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















